சோதனைக்குப் பிறகு சத்துருவின் வாசலை சுதந்தரித்துக்கொள்ளுதல் Denham Springs, Louisiana, USA 64-0322 1அதாவது வியப்புறுவதோ.. உங்களுக்குத் தெரியுமா? நாம் வார்த்தையை வாசிக்கும்போது, ஜனங்கள் எழும்பி நிற்பதைக் காண வேண்டும் என்ற ஒரு சிறு எண்ணம் எனக்கு உண்டு. நீங்கள் அதை விரும்பவில்லையா? நாம் நம்முடைய தேசத்திற்காக நிற்கும் போது, நாம் விசுவாச உறுதிமொழியைக் கூற நிற்கிறோம், அப்படியானால் ஏன் வார்த்தைக்காக இப்பொழுது நிற்கக் கூடாது? நாம் ஒரு நிமிடம் நின்றுகொண்டிருக்கையில், அண்மையில் நான் ஒரு கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது கிறிஸ்துவுக்காக நின்ற அந்த ஜனங்களைக் குறித்து நான் கடந்த இரவு சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை இதுவரை செய்யாமலிருந்தால், நீங்கள் அதை இன்றைக்குச் செய்யமாட்டீர்களா? 2ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மகத்தான சுவிசேஷகர் இருந்தார், என்னால் அவருடைய பெயரை நினைவுபடுத்த முடியவில்லை . அவருடைய பெயர் ஆர்தர் மெக்காய் என்பது என்று நான் நினைக்கிறேன். அவர் தேசத்தை விட்டு கடந்து சென்றாராம். அப்பொழுது ஓர் இரவு அவர் மகிமைக்குள் சென்றுவிட்டதாக ஒரு சொப்பனம் கண்டிருந்தாராம். அப்பொழுது அவர் வாசலண்டை சென்றதாகக் கூறினார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார். அப்பொழுது இவர், “நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து வந்துள்ள ஆர்தர் மெக்காய். நான் ஒரு சுவிசேஷகன்” என்று கூறினதாகச் சொன்னார். ஆகையால் அந்த வாயிற்காப்போன் அப்பொழுது உள்ளே சென்று, (இப்பொழுது இது ஒரு சொப்பனமாயிருந்தது), அவன் உள்ளே சென்று பார்த்துவிட்டு, “என்னால் உங்களுடைய பெயரையேக் கண்டறிய முடியவில்லை” என்று கூறிவிட்டானாம். அப்பொழுது இவரோ, “நான் ஒரு சுவிசேஷகனாய் இருந்தேன்” என்றாராம். அதற்கு அவன், “ஐயா, என்னால்...” என்றானாம். அப்பொழுது இவர், “உள்ளே செல்ல வேறு ஏதாவது ஒரு வாய்ப்பு உள்ளதா... ஏதோக் காரியம் தவறாய் உள்ளதே” என்று கூறினாராம். அதற்கு அவனோ, “இல்லை ஐயா. நான் இங்கு புத்தகத்தை வைத்துள்ளேன். என்னால் அதில் உங்களுடைய பெயரையேக் கண்டறிய முடியவில்லை ” என்று கூறினானாம். அப்பொழுது அவர், “என்னால் அதைக் குறித்து வேறு ஏதாவது செய்யமுடியுமா?” என்று கேட்டாராம். அதற்கு அவன், “நீர் உம்முடைய வழக்கை வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யலாம்” என்றானாம். தேவனே உதவி செய்யும். நான் அங்கிருக்க விரும்பவில்லை. அப்பொழுது இவர், “நல்லது, அது மாத்திரமே என்னுடைய நம்பிக்கையாயிருக்குமானால், அப்பொழுது நான் என்னுடைய வழக்கை மேல் முறையீடு செய்வேன் என்று நான் யூகிக்கிறேன்” என்று கூறினாராம். 3அப்பொழுது அவர் அங்கு புறப்பட்டு சென்றதாக எண்ணி... அவர் புறப்பட்டுச் செல்லத் துவங்கினபோது, அங்கு முதலில் இருளாயிருந்ததாகவும், பின்னர், பிரகாசமாக, பிரகாசமாக மாறினதாகவும் கூறினார். மேலும் இந்த வெளிச்சமான இடத்தில் நின்றது போல் வேறெந்த இடமும் அவ்வாறிருந்ததில்லை என்பது போல தோன்றினதாகக் கூறினார், ஆனால் அவர் அந்த இடத்தின் மையத்தில் இருந்தாராம். அப்பொழுது தேவன், “என்னுடைய நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்தை அணுகுகிறது யார்?” என்ற கேட்டதாகக் கூறினார். அப்பொழுது இவரோ, “நான் ஆர்தர் மெக்காய். நான் அநேக ஆத்துமாக்களை ராஜ்ஜியத்திற்கு ஆயத்தம் செய்ய அனுப்பப்பட்டிருந்த சுவிசேஷகன்” என்றாராம். அதற்கு அவர், “உன்னுடைய பெயர் அந்தப் புத்தகத்தில் காணப்படவில்லையா?” என்று கேட்டாராம். இவரோ, “இல்லையே” என்றாராம். அதற்கு அவர், “ஆகையால் நீ என்னுடைய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாயா?” என்று கேட்டாராம். அப்பொழுது இவரோ, “ஆம் ஐயா” என்றாராம். அதற்கு அவர், “நீர் நீதியைப் பெற்றுக்கொள்வீர். நான் என்னுடைய பிரமாணங்களைக் கொண்டு உன்னை நியாயத்தீர்ப்பேன். ஆர்த்தர் மெக்காய், நீ எப்போதாவது ஒரு பொய் சொல்லியிருக்கிறாயா?” என்று கேட்டாராம். 4அப்பொழுது இவர், “நான் அந்த ஒளியில் நிற்கும் வரையில் நான் ஒரு நல்ல மனிதனாக இருந்தேன் என்றே நான் எண்ணியிருந்தேன்” என்றார். மேலும் அவர், “ஆனால் அந்த ஒளியின் பிரசன்னத்தில் நான் ஒரு பாவியாயிருந்தேன்” என்றார். நாம் எல்லோருமே அந்தவிதமாகத்தான் இருப்போம். நீங்கள் இப்பொழுது பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம், ஆனால் நீங்கள் அங்கே வரும் வரையில் காத்திருங்கள். அவர் அபிஷேகித்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் அதை இங்கே எப்படி உணருவதாக நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்களை எவ்வளவு அற்பமாக உணர முடிகிறது! அது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர், “நீ எப்போதாவது ஒரு பொய்யைக் கூறினாயா?” என்று கேட்டார். அதற்கு இவரோ, “நான் உண்மையுள்ளவனாக இருந்து வந்ததாக நான் எண்ணியிருந்தேன், ஆனால், நான் சிறு காரியங்கள் என்று எண்ணி நல்ல காரியத்திற்காக கூறின சிறு பொய்கள், அங்கே பெரியதாகவும், கறுப்பாகவும் மாறியிருந்தன. பொழுது இவர், “ஆம் ஐயா, நான் ஒரு பொய்யைக் கூறியிருக்கிறேன்” என்றாராம். அப்பொழுது அவர், “நீ எப்போதாவது களவாடினாயா?” என்று கேட்டாராம். அதற்கு இவர், “நான் அதைக் குறித்தக் காரியத்தில், உண்மையுள்ளவனாய் இருந்து வந்தேன் என்றும், ஒருபோதும் களவாடினதில்லை என்றும் எண்ணியிருந்தேன், ஆனால், ”அந்த ஒளியின் பிரசன்னத்தில், நான் - நான் சரியில்லாத சில செயல்களில் ஈடுபட்டிருந்ததை தெளிவாக உணர்ந்தேன்.“ என்று கூறினார். அப்பொழுது அவர், 'ஆம் ஐயா, நான் களவாடியிருக்கிறேன்.'' என்று கூறினார். அப்பொழுது அவர் “என்னுடைய நியாத்தீர்ப்பு...” என்றார். மேலும் அவர், “பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போ” என்று தன்னுடைய நியாயத்தீர்ப்பைக் கேட்க கிட்டத்தட்ட அப்படியே ஆயத்தமாயிருந்தாராம். அவருடைய ஒவ்வொரு எலும்பும் தனித்தனியாக கட்டுவிட்டுக்கொண்டிருந்ததாகவும் கூறினார். அப்பொழுது, “நான் என் வாழ்க்கையில் எப்போதும் கேட்டிருந்ததிலேயே மிகவும் இனிமையான சத்தத்தை நான் கேட்டேன்” என்று கூறினார். மேலும் அவர், “நான் திரும்பிப் பார்த்தபோது, நான் எப்போதும் கண்டிருந்ததிலேயே மிகவும் இனிமையான முகத்தைக் கண்டேன் என்றும், ஒரு தாயினுடைய முகத்தைக் காட்டிலும் இனிமையாயிருந்தது என்றும், என்னுடைய தாய் என்னைக் கூப்பிட்ட சத்தத்தைவிட அந்த சத்தம் இனிமையாயிருந்தது” என்றும் கூறினார். அப்பொழுது அவர், “நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்பொழுது ஒரு சத்தம், 'பிதாவே, அது உண்மைதான், அவன் பொய்களைக் கூறினான். அவன் நேர்மையாயிருக்கவில்லை. ஆனால் பூமியிலே அவன் எனக்காக நின்றான், எனவே 'நான் இப்பொழுது அவனுடைய ஸ்தானத்தில் நிற்பேன்” என்று கூறக் கேட்டேன் என்றார். அந்தவிதமாகவே அங்கு சம்பவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இப்பொழுது அவருக்காக நிற்க விரும்புகிறேன், அதாவது அந்த நேரம் வருகிறபோது, அவர் என்னுடைய ஸ்தானத்தில் நிற்பார். 5ஆதியாகமம் 22-ம் அதிகாரத்திலிருந்து 15, 16, 17 மற்றும் 18-வது வசனங்களை நாம் வாசிப்போமாக. கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: நீ உன் புத்திரன் என்றும், உன் ஏக்சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். நாம் ஜெபம் செய்வோமாக. 6பரலோகப் பிதாவே, இப்பொழுது இந்த மூலபாடத்தை எடுத்து, கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் இந்த வார்த்தைகளை ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் சரியாகக் கொண்டு செல்வாராக. இந்த பிற்பகலில் அதுவே எங்களுடைய எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும், ஏனென்றால் கர்த்தாவே, அவைகள் மகத்தானவைகளாயிருக்கின்றன. எங்களுடைய சந்தோஷம் நிறைவாகும் படிக்கு, மிகுதியாய்க் கேளுங்கள் என்று நீர் எங்களிடத்தில் கூறினீர். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 7நான் இந்த ஒரு பாடப்பொருளைத் தலைப்பிட்டுக் கூற வேண்டுமானால், ஒரு சில நிமிடங்கள், என்னுடைய குரல் பெலவீனமாய் உள்ளது, ஆகையால் அந்தக் காரணத்தினால்தான் நான் ஒலிப்பெருக்கியின் அருகே நிற்க வேண்டியதாயுள்ளது, ஒரு எதிரொலி உண்டாவதை நான் அறிவேன். ஆனாலும் நாம் சற்று நேரம் சகித்துக்கொள்வோம். நான் இதை: சோதனைக்குப் பிறகு சத்துருவின் வாசலை சுதந்தரித்துக்கொள்ளுதல் என்று அழைக்க விரும்புகிறேன். ஆபிரகாமின் மிக ஆச்சரியாமான காட்சிகளில் ஒன்று நம்முடைய காட்சியாக திறக்கப்படுகிறது. ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பனாயிருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்டது. கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே நாம் அவனோடு சுதந்தரவாளிகளாயிருக்கிறோம். நாம் வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்கிற ஒரே வழி ஆபிரகாமின் மூலமாக மாத்திரமேயாகும். இப்பொழுது, ஆபிரகாம் ஒரு சாதாரண மனிதனாயிருந்தான், ஆனால் அவன் தேவனால் அழைக்கப்பட்டான், அவன் அந்த அழைப்பிற்கு உண்மையுள்ளவனாயிருந்தான். தேவன் அவனிடத்தில் பேசினபோது, ஆபிரகாம் அந்த சத்தத்திற்கு ஒருமுறை கூட சந்தேகப்படவில்லை. அவன் அதனோடு தரித்திருந்தான். என்னக் கடினமாயிருந்த போதிலும் கவலைப்படாமல், அவன் அதனோடு தரித்திருந்தான். அதன்பின்னர் அவனுக்கு ஒரு குமாரன் வாக்களிக்கப்பட்டிருந்தது. அவன் அந்தக் குமாரனைப் பெற்றுக்கொள்ள இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைத்தான். ஆகையால் இந்தக் குமாரனுக்குள் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டியதாயிருந்தது. கோத்திரப்பிதா தன்னுடைய அழைப்பிற்கு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தைக்கு உண்மையுள்ளவராயிருந்தார். நாம் என்னவாயிருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணமாயிருந்தார். இப்பொழுது நாம் கிறிஸ்துவுக்குள் மரிக்கின்றபடியால், நாம் ஆபிரகாமின் சந்ததியாராயிருக்கிறோம். 24 இப்பொழுது ஆபிரகாமின் இரண்டு சந்ததிகள் இருந்தன. அவைகளில் ஒன்று மாம்சபிரகாரமான சந்ததியாயிருந்தது; மற்றொன்று ஒரு ஆவிக்குரிய சந்ததியாயிருந்தது. அவைகளில் ஒன்று அவனுடைய மாம்சத்தினால் உண்டான மாம்சபிரகாரமானதாயிருந்தது; மற்றொன்று நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் மூலம் ஆபிரகாமினுடைய வித்தாகும்படிக்கு அவனுடைய விசுவாச, விசுவாச சந்ததியாயிருந்தது. 8இப்பொழுது, அவன் இருபத்தைந்து வருடங்களாக சோதிக்கப்பட்டிருந்த பிறகும், அவன் பெலவீனமடைவதற்கு பதிலாக பலமுள்ளவனானான். பாருங்கள், அது முதல் வருடத்தில் சம்பவிக்கவில்லையென்றால், அடுத்த வருடம் அது ஒரு மகத்தான அற்புதமாயிருக்கும், ஏனென்றால் அது இரண்டு வருடம் கடந்ததாயுள்ளது. அவன் அநேக வருடங்களை கடந்தவிட்டபடியால், அவன் வயோதிகனாயிருந்தபடியால், அவனுடைய சரீரம் மரித்துப்போய்விட்டது. சாராளின் கர்ப்பம், கர்ப்பம், இல்லை அது கருத்தரியாமல் இருந்தது. ஆகையால் அவனுடைய பெலன் போய்விட்டிருந்தது, அங்கே.. அது முற்றிலும் கூடாதக் காரியமாயுள்ளது. தேவன் அங்கே என்ன செய்தார் என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? பாருங்கள், அவர் அவளுடைய கர்ப்பம் கருத்தரிக்கும்படிக்கு மாத்திரம் உண்டுபண்ணியிருக்கவில்லை. ஏனென்றால், நினைவிருக்கட்டும், அவர் அதைச் செய்திருந்தால்.. அப்பொழுது நினைவிருக்கட்டும்... அப்பொழுது அவர்கள் இந்த ஆரோக்கியத்திற்காக, அந்நாட்களில் பசுவின் பாலைக் கொடுத்து உடல் நலம் பேணும்படியான பால் புட்டிகளை உடையவர்களாயிருக்கவில்லை . புரிகிறதா? அவன்... கூட... பால் கொடுக்கும் அவளுடைய மார்பக இரத்தக் குழாய்களும் வறண்டு போய்விட்டிருந்தன. ஆகையால் அவர் அவர்... முடியாது. ஏதோ ஒரு காரியம் சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. அதன்பின்னர் பிரசவ வலிக்குள்ளாகப்போகிற நூறு வயதான ஒரு ஸ்திரீயை நோக்கிப் பாருங்கள். அவளுடைய இருதயம் அதைத் தாங்கியிருந்த முடியாது. இப்பொழுது நாற்பது வயதிலே அதைப் பொறுத்துக் கொள்வது ஒரு கடினமானதாய் உள்ளது. ஆகையால் அவர் என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கவனிப்பீர்களேயானால்... 9இப்பொழுது அநேகர் கருத்து வேறுபாடு கொள்வதையும் நான் அறிவேன். இந்தக் காரியத்தைக் கூறுவது சரியாயிருக்குமா? பாருங்கள், நான்... இது என்னுடைய சொந்த சிந்தனையாயிருக்கலாம். பாருங்கள், வேதம் இயற்கைக்கு மேம்பட்ட ஒரு புத்தகமாயுள்ளது. அது வேதபாட பள்ளிகளுக்கும், வேதபண்டிதனுக்கு மறைக்கப்பட்டவாறே எழுதப்பட்டிருக்கிறது. எத்தனை பேர் அதை அறிவீர்கள்? இயேசு அதற்காக தேவனை ஸ்தோத்தரித்தார். அவர், “பிதாவே, நீர் இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” என்றார். இது ஒரு அன்பின் புத்தகமாகும். தேவனுடைய அன்பு இருதயத்திற்குள் வருகிறபோது, அப்பொழுது நீங்கள் தேவனோடு அன்பு கொள்கிறீர்கள், அப்பொழுது அவர் தம்மை வேதாகமப் பொருளில் வெளிப்படுத்துகிறார். தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களில் தம்மை வியாக்கியானிப்பதே வேதாகம் வியாக்கியானமாயுள்ளது. ஆனால் வேதம், அது மறைபொருளாய் எழுதப்பட்டுள்ளது. 10இப்பொழுது, என்னுடைய மனைவியைப் போல, ஓ, அவள் உலகத்திலேயே மிகவும் அற்புதமான ஸ்திரீயாய் இருக்கிறாள். நான் அவளை உண்மையாகவே நேசிக்கிறேன், அவள் என்னை நேசிக்கிறாள். எனவே நான் வீட்டிலிருந்து தூரமாயிருக்கும்போது, அவள், “அன்புள்ள பில், நான் இன்றிரவு பிள்ளைகளை படுக்க வைத்துவிட்டேன். நான் இன்றைக்கு துணிகளைத் துவைத்துவிட்டேன்” என்று எனக்கு ஒரு கடிதம் எழுதுவாள். அவள் என்னவெல்லாம் செய்திருந்தாள் என்பதை எழுதுவாள். இப்பொழுது, அவள் அந்தக் கடிதத்தில் அதைக் கூறிக்கொண்டிருக்கிறாள். ஆனால் நீங்கள் பாருங்கள், நான் அவளை மிக அதிகமாய் நேசிக்கிறேன், எனவே நான் - நான் அந்த மறைபொருளை வாசித்து அறிந்து கொள்ளுமளவிற்கு நாங்கள் அவ்வளவு ஒன்றாயிருந்து கொண்டிருக்கிறோம். பாருங்கள், அவள் அதைக் கூறினாலும் அல்லது கூறாவிட்டாலும், அவள் என்னக் கூற விரும்புகிறாள் என்பதை நான் அறிவேன், பாருங்கள். அவள் எதைப் பொருட்படுத்திக் கூறுகிறாள் என்பதை நான் - நான் அறிவேன், ஏனென்றால் அது அவளுக்கான என்னுடைய அன்பாயும், என்னுடைய புரிந்துகொள்ளுதலாயும் உள்ளது. நல்லது, அந்த விதமாகவே வேதாகமம் எழுதப்பட்டுள்ளது. புரிகிறதா? பாண்டித்தியம் அதைக் கண்டுகொள்ளாமல் போய் விடும்; அவர்கள் அதை ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். பாருங்கள், நீங்கள் வார்த்தையோடு அன்பு கொண்டிருக்க வேண்டும், அவரை, “அவரை அறிந்து கொள்ள வேண்டும்.'' புரிகிறதா? 32 இப்பொழுது, இப்பொழுது இங்கே, அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது ஆபிரகாம், சாராள் இருவருமே ”மிகவும் வயோதிகர்களாயிருந்தனர்“ என்று வேதம் உரைத்துள்ளது. இப்பொழுது அவர்கள் அங்கே நீண்ட காலம் வாழ்ந்த ஜனங்களாயிருந்தனர் என்ற காரணத்தினால் அல்ல. வேதம், ”அவர்கள் மிகவும் வயதில் முதியோராயிருந்தனர்“ என்றேன் கூறியுள்ளது. 11இப்பொழுது கவனியுங்கள், நாம் பேசிக்கொண்டு வந்துள்ள இந்தத் தூதனின் பிரசன்னமாகுதலுக்குப் பிறகு உடனே, அது ஏலோஹிம், தேவனாகும். அவர் ஆபிரகாமினிடத்தில், “நான் உற்பவ காலத்திட்டத்தில் உன்னை சந்திக்கப் போகிறேன்” என்று கூறினார். இப்பொழுது முழுமையாக கவனித்துப் பார்த்தால், அவர்கள் தொடர்ந்து முழுவதுமே சபைக்கு ஒரு மாதிரியாய் இருந்தனர். இப்பொழுது பாருங்கள். இங்கே என்ன சம்பவித்துள்ளது. இப்பொழுது, அவர் சாராளுக்கு, ஒட்டுப் போடவில்லை, ஆபிரகாமுக்கும் ஒட்டுப் போடவில்லை . அவர் அவர்களை ஒரு வாலிபனாகவும், வாலிப ஸ்திரீயாகவும் திரும்பவும் மாற்றினார். இப்பொழுதோ அது விநோதமாகத் தென்படலாம், ஆனால் இப்பொழுது மற்ற வார்த்தையைக் கவனியுங்கள், அது ஒன்று சேருகிறது. வார்த்தை ஆவியினால் ஏவப்பட்டுள்ளது, நீங்கள் வார்த்தையோடு ஆவியினால் ஏவப்பட வேண்டும். இப்பொழுது, நினைவிருக்கட்டும், அதற்கு பிறகு உடனே, இந்த தூதனின் பிரசன்னமாகுதலுக்குப் பிறகு உடனே ... சாராள் அந்த நரைத்த தலைமுடியோடு, தன்னுடைய தோளின் மீது சால்வையோடு பாட்டியாய், தூசிபடியாமலிருக்க ஒரு சிறு தொப்பியோடு, ஒரு தடியைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்வதை என்னால் அப்படியேக் காண முடிகிறது. “முதிர்ந்த வயதுள்ளவருமான என் ஆண்டவனோடு எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?” என்று எண்ணினாள். பார்த்தீர்களா? இதோ ஆபிரகாமோ, அவன் மிகவும் முதிர்ந்த வயதுள்ளவனாயிருந்தபடியால் இந்த நீண்ட தாடியோடு, ஒரு தடியையும் பிடித்துக் கொண்டிருந்தான். அடுத்த நாள் காலையிலோ அவனுடைய தோள்பட்டைகள் நேராக நிமிர்ந்து நிற்கத் துவங்க, அவனுடைய கூன் முதுகில் மறைந்து போய்விட்டதை நான் காண்கிறேன். அவளுடைய தலைமுடி கருமையாக மாறத் தொடங்கின. அவர்கள் மீண்டும் ஒரு வாலிப மனிதனாகவும், ஒரு வாலிப ஸ்திரீயாகவும் மாறிவிட்டனர். அவர் ஆபிரகாமின் ராஜரீக வித்திற்கு என்ன செய்யப் போகிறார் என்பதையே அது அப்படியேக் காண்பிக்கிறது, பாருங்கள், நாம் ஒரு இமைப்பொழுதில் “மறுரூபமாக்கப்படும்போது, ஒன்று சேர்ந்து எடுத்துக்கொள்ளப்படுவோம்.” என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது நான் உங்களுக்கு இதை நிரூபிக்கட்டும். இப்பொழுது அவர்கள் இருந்த இடத்திலிருந்து அங்கே கொமோராவிற்கு ஒரு பயணம் மேற்கொண்டு, பெலிஸ்திய தேசத்தில் உள்ள கேராருக்குச் சென்றனர். நீங்கள் கவனித்தீர்களா? அது எவ்வளவு தூரம் உள்ளது என்று சாலை வரைபடத்தில் பார்த்து குறித்துக்கொள்ளுங்கள். அந்த வயோதிக தம்பதிகளுக்கான ஒரு நீண்ட பயணம். 12அதன்பின்னர், அது மட்டுமில்லாமல் அங்கே பெலிஸ்திய தேசத்திலே அபிமெலேக்கு என்னும் பெயர்கொண்ட ஒரு வாலிப ராஜா இருந்தான், அப்பொழுது அவன் ஒரு மனைவிக்காக தேடிக் கொண்டிருந்தான், அவன் அந்த எல்லா அழகான பெலிஸ்திய பெண்களையும் அங்கே உடையவனாயிருந்தான், ஆனால் அவன் இந்தப் பாட்டியைக் கண்டபோது, அவன், “அவள் காண்பதற்கு அழகாக காணப்படுகிறாளே” என்று கூறி, அவள் மீது காதல் கொண்டு, அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினான். அது உண்மை . ஹு ஹு. பாருங்கள், அவள் அழகாய் இருந்தாள். புரிகிறதா? அவள் ஒரு வாலிப ஸ்திரீயாக மீண்டும் மாறியிருந்தாள். கவனியுங்கள், அவள் அந்தப் பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டியதாயிருந்தது. தேவன் அவளை ஒரு புதிய சிருஷ்டியாக ஆக்கியிருந்தார். அவள் இந்தப் பிள்ளையை வளர்க்க வேண்டியவளாயிருந்தாள். நினைவிருக்கட்டும், ஆபிரகாம், “அவனுடைய சரீரம் செத்துப் போயிருந்தது, ஆபிரகாமுக்கு சாராள் மரித்துப் போனாள், சாராள் மரித்தபோது, ஈசாக்கு நாற்பத்தைந்து வயதாயிருந்தான் என்று நான் நினைக்கிறேன். அதன்பிறகு ஆபிரகாம் மற்றொரு ஸ்திரீயை விவாகம்பண்ணி குமாரர்களை மாத்திரம், குமாரத்திகளில்லாமல், ஏழுபேரை உடையவனாயிருந்தான். ஆமென். மறைபொருளை வாசித்துப் பாருங்கள். அது ஒரு மாதிரியாய் உள்ளது. அவர் ஆபிரகாமின் பிள்ளைகள் எல்லோருக்கும் என்ன செய்யப் போவதாயிருக்கிறார் என்பதையே அங்கே அது காண்பிக்கிறது. நாம் இப்பொழுது அதற்கு அப்படியே நெருங்கிக்கொண்டிருக்கிறோம், ஆகையால் நண்பர்களே, நம்முடைய தொங்கின தோள்களும், மற்ற ஒவ்வொரு காரியமும் எந்த வித்தியாசத்தையுமே உண்டு பண்ணுகிறதில்லை. நம்முடைய நரைமுடிகள் மற்றும் அது என்னவாயிருந்தாலும், இப்பொழுது அது ஒரு பொருட்டல்ல. நாம் பின்னோக்கிப் பார்க்கிறதில்லை. நாம் எங்கே வந்து கொண்டிருக்கிறோம் என்றே முன்னோக்கிப் பார்ப்போமாக. நினைவிருக்கட்டும், நாம் பார்த்துக்கொண்டிருக்க இந்த அடையாளம், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் பிறப்பதற்கு முன்பு ஆபிரகாமும் சாராளும் கண்டிருந்த கடைசி அடையாளமாயிருந்தது, நாம் அந்த வேளையில் இருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம். 13கோத்திரப் பிதா, இந்தப் பையன் பிறந்த பிறகு. ஏறக்குறைய பன்னிரெண்டு வயதுடைய, சிறிய அழகிய, சுருள் முடியைக் கொண்ட பையனாய், சிறிய பழுப்புநிறக் கண்களைக் கொண்ட ஈசாக்கை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அந்தத் தாய், அழகான வாலிப ஸ்திரீயான அவளும், அவனுடைய தகப்பனும் எப்படி உணர்ந்திருப்பாள் என்று நான் கற்பனை செய்து பார்க்க விரும்புகிறேன். ஒரு நாள், தேவன் கூறினார், இப்பொழுது, உதாரணமாக; நாம் சற்று தூரத்தில் நின்று பார்க்கிறோம், அந்தக் காட்சியின் நேரம் இப்பொழுது வர உள்ளது. “நான் இந்தப் பையனின் மூலமாக உன்னை ஜாதிகளுக்கு ஒரு தகப்பனாக்கியிருக்கிறேன், ஆனால் நீ இந்தப் பையனை நான் உனக்கு காண்பிக்க உள்ள மலையின் உச்சிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீ அங்கே அவனை ஒரு பலியாக கொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இப்பொழுது அந்தவிதமான ஒரு சோதனைக்கு செல்லும்படி நீங்கள் ஒருபோதும் கேட்டுக் கொள்ளப்படவேயில்லை. அவர் அதை இப்பொழுது செய்கிறதில்லை. அது மாதிரிகளாயும், நிழல்களுமாயிருந்தன. ஆபிரகாம் பயந்தானா? இல்லை ஐயா. ஆபிரகாம் இதைக் கூறினார், அதாவது, “தேவன் அவனை மரித்தோரிலிருந்து எழுப்ப வல்லவராயிருக்கிறார் என்று நான் முழு நிச்சயமாய் நம்பியிருக்கிறேன், ஏனென்றால் நான் அவனை மரித்தோரிலிருந்து எழுந்த ஒருவனைப் போலப் பெற்றுக்கொண்டேன். அந்த தேவனுடைய கட்டளை இதைச் செய்யும்படி என்னிடத்தில் கூறியிருந்ததால், நான் அதற்கு உண்மையாய் தரித்திருந்து, எனக்கு அளித்துள்ள குமாரனைச் செலுத்தினேன்; தேவன் அவனை மரித்தோரிலிருந்தெழுப்ப வல்லவராயிருக்கிறார் என்றும், நான் அவனை ஒரு பாவனையாகப் பெற்றுக்கொண்டேன்” என்றும் கூறினான். ஓ, என் சிநேகிதனே! தேவன் பெந்தேகோஸ்தேக்காரர்களாகிய உங்களுக்கு பரிசுத்த ஆவியை, அந்நியபாஷை பேசுதலை அளிப்பாரானால், நீங்கள் அவருடைய சுகமளிக்கும் வல்லமையிலும், அவருடைய தயவிலும் இரக்கத்திலும் எவ்வளவு அதிகமாய் விசுவாசங்கொள்ள வேண்டும். தேசத்தில் உள்ள எல்லா வேத சாஸ்திரிகளும் அதற்கு விரோதமாயிருந்தபோதிலும், அவர் அதைச் செய்துவிட்டாரே! அது செய்யப்பட முடியாது என்று அவர்கள் கூறினர், ஆனால் தேவன் அதைச் செய்துவிட்டார், ஏனென்றால் அவர் அதை வாக்களித்தார். ஆகையால் உங்களுடைய துப்பாக்கியைக் கொண்டு, உங்களுடைய வார்த்தையைக் கொண்டு, உங்களுடைய பட்டயத்தைக் கொண்டு நின்று, தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார், அதுவே இதற்கு தீர்வாகிறது. 14கவனியுங்கள், இப்பொழுது, அவன் அங்கிருந்து கோவேறு கழுதையைக் கொண்டு ஈசாக்கை மூன்று நாள் பிரயாணமாகக் கொண்டு சென்றான். இப்பொழுதும் என்னால் நடக்க முடியும், நான் ரோந்துப் பணியில் இருந்தபோது, நான் ஒவ்வொரு நாளும் வனாந்திரத்தினூடாக முப்பது மைல்கள் நடந்து செல்வேன். நாம் நடந்து செல்வதற்கு பதிலாக மோட்டார் வாகனங்களில் சவாரி செய்து பழைவிட்டோம். ஆனால் அந்த மனிதர்களுக்கு, அவர்களுடைய போக்குவரத்தாக இருந்த ஒரே வழி ஒரு கழுதை மீது சவாரி செய்வது அல்லது அல்லது நடந்து செல்வதாயிருந்தது. எனவே அவன் அங்கிருந்து மூன்று நாட்கள் பிராயாணம் மேற்கொண்டு, அதன்பின்னர் வனாந்திரத்தில் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, தூரத்திலே அந்த மலையைக் கண்டான். அவன் ஈசாக்கை அழைத்துக் கொண்டுபோய், அவனுடைய கரங்களைக் கட்டினான். இங்கே ஆதியாகமம் 22-ல் உள்ள அது கிறிஸ்துவிற்கு ஒரு மாதிரியாய் உள்ளது என்பதை நாம் யாவரும் அறிவோம். இயேசுவானவர் மலையின் மேல், கல்வாரி மலையின் மேல் வழி நடத்தப்பட்டது போல, அவனைக் கட்டி மலையின் மேல் வழி நடத்தினான்; உண்மையாகவே, தேவன் தம்முடைய குமாரனைத் தந்தருளின் ஒரு மாதிரி. ஆனால் அவர்கள் அங்கு சென்றபோது, அவன் கீழ்படிந்தவனாயிருந்தான், ஈசாக்கு ஒருவிதமாக சந்தேகப்படத் துவங்கினான். அவன், “தகப்பனே, இங்கே கட்டை உள்ளது, இங்கே பலிபீடமும் உள்ளது, இங்கே அக்கினியும் உள்ளது, ஆனால் பலியானது எங்கே?” என்று கேட்டான். ஆபிரகாம், தன்னுடைய சிந்தையில் இன்னமும் தேவனுடைய வார்த்தை அங்கே நினைவில் இருப்பதை அறிந்தவனாய், அவன், “என் மகனே, தேவன் ஒரு பலியை தமக்காக அருளவல்லவராயிருக்கிறார்” என்றான். அவன் அந்த இடத்தை, “யோகோவாயீரே” என்று அழைத்தான். அவன் தன்னுடைய மகனைக் கட்டியபோது, அவன் மரணத்திற்கு கீழ்படிந்திருந்தபடியால், அவனை பலிபீடத்தின் மேல் வைத்து, உறையிலிருந்து கத்தியை இழுத்து, தன்னுடைய சொந்த குமாரனின் ஜீவனையே எடுக்கத் துவங்கினான். அவன் அதைச் செய்யத் துவங்கினபோது, ஏதோ ஒன்று அவனுடைய கரத்தைப் பற்றிப் பிடித்து, “ஆபிரகாமே, உன்னுடைய கையைப் போடாதே,” என்று உரைத்தது. 15அந்த நேரத்திலே வனாந்திரத்தில் அவனுக்கு பின்னே ஒரு ஆட்டுக் கடா தன்னுடைய கொம்புகள் சிக்கிகொண்டிருப்பதனால் கத்தியது. அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? தேசம் முழுவதுமே ஆட்டைப் பட்சிக்கும் மிருகங்களான சிங்கங்கள், ஓநாய்கள், குள்ளநரிகளால் நிறைந்திருந்தது என்பது நினைவிருக்கட்டும். அந்த ஆடு ஜனக்குடியிருப்பிற்கு எவ்வளவு தூரமாயிருந்தது? அப்பொழுது மலையின் உச்சியில் அங்கே தண்ணீரும் இல்லாதிருந்தது. அவன் பலிபீடத்தை உண்டுபண்ண சுற்றிலுமிருந்த கற்களைப் பொறுக்கினான். அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது? புரிகிறதா? ஆனால் அது ஒரு தரிசனமாயிருக்கவில்லை . அப்பொழுது அவன் அந்த ஆட்டுக் கடாவைக் கொன்றான்; அதற்கு இரத்தம் இருந்தது. அவன் என்னக் கூறினான்? “தேவன் தமக்காக ஒரு பலியைத் தர வல்லவராயிருக்கிறார்.” நீங்கள் அந்த நாற்காலியிலிருந்து எப்படி எழுந்து வரப் போகிறீர்கள்? எப்படி அந்த வலிப்பு நோயுள்ள குழந்தை குணமடையப் போகிறது அல்லது நீங்கள் அந்த நாற்காலியிலிருந்து, நீங்கள் அங்கிருந்து எப்படி எழுப்பப் போகிறீர்கள்? ஒரு இருதயக் கோளாறோடுள்ள நீங்கள் எப்படி குணமடையப் போகிறீர்கள்? காரியம் என்னவாயிருந்தாலும், “தேவன் தமக்காக அருள வல்லவராயிருக்கிறார்.” ஆபிரகாம் அதை விசுவாசித்தான். கோத்திரப் பிதா வாக்குத்தத்திற்கு உண்மையாய் தரித்திருந்தார். அவர், “உன்னுடைய சந்ததியார்!, நீ என்னுடைய வார்த்தையை விசுவாசித்தபடியால், சூழ்நிலை என்னவென்பதை பொருட்படுத்தாதபடியால், உன்னுடைய சந்ததியார் தங்களுடைய சத்துருவின் வாசலைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்” என்று வாக்களித்தார். ஏன்? எழும்பின் ஒவ்வொரு சத்துருவும், ஒரு பாவனையாக, ஆபிரகாமுக்கு எதிராயிருந்தது, ஆபிரகா.. அந்த சத்துரு, “அவள் மிகவும் வயோதிகமாயிருக்கிறாள். நானும் மிகவும் வயோதிகனாயிருக்கிறேன். இந்த யாவும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் எதிராகவே இருந்தது. அவன் அப்பொழுதும் அந்த வாக்குத்தத்தத்திற்கு உண்மையாயய்த் தரித்திருந்தான். 16இப்பொழுது அந்த விசுவாசத்தை சுதந்தரித்துக்கொள்ளுகிற மனிதன் இன்னமும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வான். இப்பொழுது, உங்களால் அதைச் செய்ய முடியவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் ஆபிரகாமின் வித்து அல்ல. அந்த விதமான விசுவாசத்தையே ஆபிரகாம் உடையவனாயிருந்தான், அவனுடைய சந்ததியும் அவ்வாறே இருக்கும். ஆபிரகாமின் வாக்குத்தத்தம் அவனுடைய “சந்ததிக்குமானதாய் ” இருந்தது, நான் கொஞ்ச நேரத்திற்கு முன்னர் உங்களுக்குக் கூறினது போல, இப்பொழுது அது அவனுடைய ராஜரீக சந்ததிக்குமானதாயுங்கூட உள்ளது. அவர் ஆபிரகாமுக்கு அளித்த இந்த முத்திரை ஒரு வாக்குத்தத்த முத்திரையாயிருந்தது. எபேசியர் 4:30 - ன் படி ராஜரீக சந்ததியார், அவர்கள் சோதனைக்கு நின்ற பிறகு, “பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கின்றனர். அதைக் குறித்து சிந்தித்துப்பார்க்க முயற்சியுங்கள். அநேகர் தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக எண்ணுகிறார்கள். அநேகர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமை கோருகிறார்கள். அநேகரால் அநேக அத்தாட்சிகளையும், அதனுடைய அடையாளங்களையும் காண்பிக்க முடியும். ஆனால் இன்னமும் அது இந்த வார்த்தையோடு தரித்திருக்க முடியவில்லையென்றால், அது பரிசுத்த ஆவியல்ல. புரிகிறதா? நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும், அப்பொழுதே நீங்கள் சோதனைக்குப் பிறகு முத்திரையிடப்படுகிறீர்கள். நாம் வார்த்தையில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் விசுவாசிக்கும்போது, அப்பொழுது அந்த வாக்குத்தத்தத்தை உறுதிபடுத்த நாம் ஆவியினால் முத்திரையிடப்படுகிறோம். அந்த விதமாகத்தான், அப்படித்தான் ஆபிரகாமுக்கு நடந்தது, அந்த விதமாகவே அவன் அதைச் செய்தான். அப்பொழுது, அப்பொழுதே நம்முடைய சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ள நமக்கு உரிமை உண்டு. நீங்கள் முதலில் அந்த சந்ததியாக மாறும் வரையில் உங்களால் அதைச் செய்ய முடியாது. நினைவிருக்கட்டும், வேதத்தில்.... 17நான் ஹவுஸ்டனில் அல்லது எங்கோ, மற்றெங்கோ. இல்லை, நான் டல்லாஸ் என்று கூற விரும்புகிறேன், அங்குதான் அதன் பேரில் பேசினேன். அடையாளம். பாருங்கள், இஸ்ரவேலில் உள்ள ஒரு - ஒரு யூதனால் விருத்தசேதனத்தைக் கொண்டு தான் ஒரு யூதன் என்பதைக் காண்பிக்க முடிந்தது. ஆனால் தேவன், “நான் இரத்தத்தைக் காணும்போது! இரத்தம் உங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும்” என்றார். அந்த இரத்தத்தில் இருந்த ஜீவன் ஆராதனை செய்பவர் மேல் வர முடியாது, ஏனென்றால் அது மிருகத்தினுடைய ஜீவனாயிருந்தது, அது வரப்போகும் உண்மையான ஜீவனுக்கு ஒரு நிழலாய் மாத்திரமேயிருந்தது. அப்பொழுது அந்த ரசாயனம், அந்த இரத்தம்தானே வாசலின் மேல், வாசலின் நிலைக்கால்களின் மேல் பூசப்பட வேண்டியதாயிருந்தது. அது ஈசோப்பினால் பூசப்பட்டது, அது ஒரு சாதாரணக் களைச் செடியாயுள்ளது, எனவே அது நீங்கள் ஏதோ ஒரு மிக மேன்மையான விசுவாசத்தை உடையவர்களாயிருக்க வேண்டியதில்லை என்பதையேக் காண்பிக்கிறது. நீங்கள் உங்களுடைய காரை இயக்க வேண்டியதற்கு, சபைக்கு வருவதற்கு பெற்றுள்ள விசுவாசத்தைப் போன்ற அதே விசுவாசத்தையே உடையவர்களாயிருக்க வேண்டும். புரிகிறதா? ஏராளமான ஜனங்கள் தாங்கள் வேறு ஏதோ ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், இல்லை, இல்லை, அது தவறாகும். நீங்கள் எல்லோருமே சாதாரண விசுவாசத்தினாலே இரத்தத்தைப்பூச வேண்டியதாயுள்ளது. வார்த்தைக்கு செவிகொடுங்கள், வார்த்தையை விசுவாசியுங்கள், அதை கிரியையைக்குட்படுத்துங்கள், அவ்வளவுதான். அங்கே பாலஸ்தீனாவில் எங்கு வேண்டுமானாலும் ஈசோப்பு என்ற அந்த களைச் செடிகளைப் பிடுங்கிக்கொள்ளலாம், அது சுவர்களின் வெடிப்புகளிலும், சுவர்களைச் சுற்றிலும் வளர்ந்து காணப்படும் ஒரு சிறு களைச் செடியே ஈசோப்பாகும், அதில் அவர்கள் இரத்தத்தைத் தோய்த்து, அதை வாசல் நிலைக்கால்களின் மேற் சட்டத்தின் மேல் பூசினர். 18நினைவிருக்கட்டும், அவர்கள் எவ்வளவுதான் உடன்படிக்கையில் இருந்திருந்தாலும், அவன் விருத்தசேதனம் பண்ணப்பட்ட யூதன் என்று காண்பிக்க முடிந்தாலும், அவன் எவ்வளவுதான் ஒரு நல்ல நபராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அந்த அடையாளாம் அங்கே இருந்திருந்தாலொழிய அந்த உடன்படிக்கை யாவும் ரத்து செய்யப்பட்டிருந்தது. “நான் அந்த இரத்தத்தைக் காணும் போது ” மாத்திரமேயாகும். இப்பொழுது, இப்பொழுது இரத்தம், அடையாளம் இரசாயணம் அல்ல, கிறிஸ்துவின் இரத்தத்தின் இரசாயணம் அல்ல, ஏனென்றால் அது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிந்தப்பட்டது. ஆனால், நீங்கள் பாருங்கள், அங்கே இருக்க வேண்டியதாயிருந்த இரத்தம், மிருகத்தில் இருந்த ஜீவனால் மானிடர் மேல் திரும்பவும் வர முடியாது, ஏனென்றால் அந்த மிருக ஜீவனுக்கு ஒரு ஆத்துமா கிடையாது. மிருகமானது சரியானதையும், தவறானதையும் அறியாது. மானிட வர்க்கமே ஆத்துமாவை உடையதாயிருக்கிறது. 19இப்பொழுது, ஆனால் இயேசு, தேவகுமாரன், கன்னிப் பிறப்பானவர் தம்முடைய இரத்தத்தைச் சிந்தினார், அந்த இரத்தத்தில் இருந்த ஜீவன் தேவனாயிருந்தது. வேதம், “நாம் தேவனுடைய இரத்தத்தின் ஜீவனால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்” என்று உரைத்துள்ளது. ஒரு யூதனின் இரத்தத்தினால் அல்ல, ஒரு புறஜாதியானின் இரத்தத்தினால் அல்ல; ஆனால் தேவனுடைய ஜீவனால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் தம்முடைய இரத்த அணுவை சிருஷ்டித்து, கன்னிப் பிறப்பாய் பிறந்தார். அவள் எந்த மனிதனையுமே அறியாதிருந்தாள், அவளிடத்திலிருந்து. அவளிடத்திலிருந்து கரு முட்டைகளும் உண்டாகவில்லை. உங்களில் அநேக ஜனங்கள் கரு முட்டை உண்டானது என்று நம்பத்தான் வேண்டுமென்றிருப்பதை நான் அறிவேன். ஒரு உணர்ச்சியின்றி அங்கே கருமுட்டைகள் உண்டாக முடியாது, அப்படியானால் தேவன் என்ன செய்வார்? புரிகிறதா? அவர் முட்டையையும், இரத்த அணுவையும் சிருஷ்டித்தார், அதுவே தேவனுடைய பரிசுத்த கூடாரமாயிருந்தது. “நான் என்னுடைய பரிசுத்தரின் அழிவைக் காணவொட்டேன்.” முட்டை எங்கிருந்து உண்டானது என்று புரிகிறதா? “நான் அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன்.” அவருடைய சரீரம் பரிசுத்தமானதாயிருந்தது! ஓ, என்னே ! நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை, உங்களால் அதை விசுவாசிக்க முடியவில்லையென்றால், நீங்கள் எப்படி உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்ள முடியும்? “நாம் தேவனுடைய இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். அங்குதான் என்னுடைய விசுவாசம் உள்ளது. ஒரு தீர்க்கதரிசியின் இரத்தத்தில் அங்கே நடப்பதல்ல, ஒரு சாதாரண மனிதனின் இரத்தத்தில், அல்லது ஒரு வேதபாட ஆசிரியர் அல்லது ஒரு வேத சாஸ்திரியின் இரத்தத்தில் அங்கே நடப்பதல்ல. நாம் அங்கே தேவனுடைய இரத்தத்தில் நடக்கிறோம். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். அவர் மானிடனானார். அவர் தம்முடைய ரூபத்தை மாற்றினார். அவர் இங்கே நம்மோடிருக்கும்படி தம்முடைய கூடாரத்தை விரித்து, நம்மில் ஒருவரானார். அவர் நம்முடைய இனத்தான் மீட்பராயிருக்கிறார். அவர் நமக்கு இனத்தாராக வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அது நியாயப் பிரமாணமாயிருந்தது. தேவன் மனிதனாகி, நம்மத்தியிலே வாசம்பண்ணினார். 20அது எப்படி என்று கவனியுங்கள், இதைச் செய்ய அவர் தேவனிடத்திலிருந்து, ஆவியானவரிடத்திலிருந்து வந்தார், அந்த ஆவி விசுவாசியின் மேல் வருகிறது. ஆகையால் நம்முடைய பலியில் இருந்த அந்த ஜீவனால், நாம் அதே ஜீவனால் அடையாளங் கண்டு கொள்ளப்படுகிறோம். அப்படியானால் அது நம்முடைய பலியின் நம்முடைய அடையாளமாயிருக்கும்போது, தேவனுடைய ஜீவன் ஜனங்களுக்கு மத்தியில் அசைவாடுவதை அவர்கள் கண்டு, எப்படி அதை அசுத்தமான காரியம் என்று அழைக்க முடியும்? “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” நாம் நம்முடைய கரங்களை அதன் மேல் வைத்து, நம்முடைய சொந்த சிந்தனைகளுக்கு நம்மை மரித்தவர்களாக அடையாளங்காட்டும்போது, அந்த பலி... பலியிலிருந்து அவருடைய ஜீவன் திரும்பி வருகிறது. அப்பொழுது நாம் எப்படி ஸ்தாபனங்கள் நம்மை கோட்பாடுகளுக்கும் மற்ற காரியங்களுக்குள்ளும் தள்ள அனுமதித்து, நாம் அதை விசுவாசிக்கிறோம் என்று கூற முடியும்? நாம் அந்தக் காரியங்களுக்கு மரித்துவிட்டிருக்கிறோம். பவுல், “இந்தக் காரியங்கள் எதுவுமே என்னைத் தொல்லைப் படுத்துகிறதில்லை” என்றான், ஏனென்றால் அவன் முற்றிலுமான கிறிஸ்துவினண்டைக் கட்டப்பட்டிருந்தான். ஒவ்வொரு உண்மையான சாதனையும் முற்றிலுமானதற்கே கட்டப்பட்டிருக்கிறது, என்னுடைய முற்றிலுமானது வார்த்தையாயுள்ளது. ஒவ்வொருவருக்கும், அதாவது-அதாவது உண்மையாகவே ஆவியினால் பிறந்தவர்களுக்கு தேவனுடைய வார்த்தையே அவர்களுடைய முற்றிலுமானதாய் உள்ளது. நான் அதற்குக் கட்டப்பட்டிருக்கிறேன். நான் என்னுடைய கரங்களை அதன்மேல் வைத்தேன். அது என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டது, நான் என்னை அவரோடு அடையாளங்கண்டுகொண்டேன். அவர் தம்மை நம்மோடு அடையாளங்கண்டு கொள்வதாக வாக்களித்தார் என்பதை நாம் அறிவோம். அதுவே அசலான விசுவாசத்தைக் கொண்டுவருகிறது; உங்களுடைய சொந்த விசுவாசத்தை அல்ல, ஆனால் அவருடைய விசுவாசம், நீங்கள் கட்டுப்படுத்தாத ஏதோ ஒரு காரியம். அவர் அதைச் செய்கிறார். இப்பொழுது கவனியுங்கள். அதன் பின்னர், அப்பொழுது மாத்திரமே, வாக்குத்தத்தம் உங்களுக்குப் பண்ணப்படுகிறது. 21நீங்கள் எத்தனை சபைகளை சேர்ந்திருந்தாலும், நீங்கள் எத்தனை முறை ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தாலும், முகம் முன்புறம் முழுகும்படி, பின்புறமாக, நீங்கள் விரும்புகிற எந்த விதத்திலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அந்த முத்திரை உங்கள் மீது போடப்படும் வரையில் உங்களுடைய பலியோடு உங்களை இணைத்துக்கொள்ளும்படி அழைக்க உங்களுக்கு உரிமையேக் கிடையாது. தேவனுடைய முத்திரை என்றால் என்ன? எபேசியர் 4:30, “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகிறது. ஒரு எழுப்புதலிலிருந்து மற்றொரு எழுப்புதல் வரையல்ல, நீங்கள் திரும்பவும் மீட்கப்படுகின்ற நாள் வரைக்கும் நித்தியமாக முத்திரையிடப்பட்டீர்கள். 22நினைவிருக்கட்டும், நீங்கள் தேவனுடைய சிந்தையில் ஒருபோதும் இல்லாமலிருந்திருந்தால், நீங்கள் ஒருபோதும் தேவனோடு இருக்கவே மாட்டீர்கள். அவர் ஒரு மீட்பராயிருந்தார் என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? (சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர். -ஆசி.) அப்படியானால் மீட்கப்பட்ட எந்தக் காரியமும் அது எங்கிருந்து விழுந்ததோ அந்த பழைய நிலைக்குத் திரும்ப வர வேண்டும். ஆகையால் அவர் நம்மை மீட்க வரவில்லையென்றால், ஒரு காலத்தில் மீட்கப்பட முடியாமல், நாம் எல்லோரும் “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் உலகத்திற்கு வந்த நாம் எப்படியிருந்திருக்க முடியும்? ஒரு உலகம் அல்லது ஒரு நட்சத்திரம் அல்லது காற்று அல்லது வேறெந்த ஒரு காரியமும் உண்டாவதற்கு முன்னமே உண்மையான கிறிஸ்தவன் தேவனுடைய சிந்தையின் தன்மையாயிருக்கிறான் என்பதையே அது காண்பிக்கிறது. அது நித்தியமாயுள்ளது, அவர் நம்மை மீண்டும் மீட்பதற்கே வந்தார். அது தேவனுடைய சிந்தை ஒரு வார்த்தையை உரைக்க வெளிப்படுத்தப்பட்டதாயிருக்கிறது, அவருடைய சிந்தைக்கு மீண்டும் கொண்டு வரப்படுகிறதாய்... உள்ளது. இனத்தான் மீட்பர்! அந்தக் காரணத்தினால்தான் தேவன் தாமே மீட்கும்படிக்கு நம்மில் ஒருவராக வேண்டியதாயிருந்தது. வேறெந்த காரியமும் அதைச் செய்ய முடியாததாயிருந்தது. ஒரு தூதனால் அதைச் செய்ய முடியவில்லை, வேறு யாருமே அதைச் செய்ய முடியவில்லை. அவர் நம்மை மீட்க, நம்மைப் போல் சோதிக்கப்பட கீழே வரவேண்டியதாயிருந்தது. 23இப்பொழுது மாம்சபிரகாரமான ஆபிரகாமின் சந்ததியைக் கவனியுங்கள். அந்த மாம்சபிரகாரமான சந்ததியில் சிலவற்றை நாம் ஆராய்ந்து பார்ப்போமாக. தேவன் தம்முடைய வார்த்தையை மாம்சப்பிரகாரமான சந்ததியாயிருந்த ஈசாக்கோடு காத்துக்கொண்டாரா என்று பார்ப்போமாக. எந்தக் கேள்வியுமின்றி தேவனுடைய வாக்குத்தத்தத்தை முழுமையாய் விசுவாசித்த சில மாம்சபிரகாரமான சந்ததியை நாம் ஆராய்ந்து பார்ப்போமாக. இப்பொழுது நினைவிருக்கட்டும், அங்கே கோடாகோடி பேர் விருத்தச்சேதனம் பண்ணப்பட்டிருந்தும், அதே சமயத்தில் ஆபிரகாமினுடைய சந்ததியாயில்லாமலிருந்தனர். நிச்சயமாக, “ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, உள்ளத்திலே யூதனானவனே யூதன்.” அவர்கள், அவர்களில் அநேகர் தவறிப்போயினர், கடுந்துயரமாய் தவறிப்போயினர். வனாந்திரத்தில் நோக்கிப் பாருங்கள், அவர்கள், “நாங்கள்...” என்றனர். பஸ்கா நாளிலே இல்லை ஊற்றண்டை பருகுகையிலே, பரிசுத்த யோவான் 6. அவர்கள் எல்லோரும் களிகூர்ந்து கொண்டிருந்தனர். இயேசு, “நானே வனாந்திரத்தில் இருந்த அந்தக் கன்மலை. நானே தேவனிடத்திலிருந்து, வானத்திலிருந்து இறங்கின அப்பம், ஒரு மனிதன் அதைப் புசித்தால், மரிக்கமாட்டான்” என்றார். அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் நாற்பது வருடங்களாய் மன்னாவைப் புசித்தனர்” என்றனர். அதற்கு அவர், “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துப் போயினர்” என்றார். மரித்துப்போன என்ற அந்த வார்த்தையை எடுத்து, அதை ஆராய்ந்து பார்த்தால், அது என்ன பொருள்படுகிறது என்று பார்த்தால், “நித்தியமாக பிரிக்கப்பட்டிருத்தல்” என்பதாய் உள்ளது. அதே சமயத்தில் அவர்கள் ஆபிரகாமினுடைய சந்ததியாயிருந்தனர். மரணம் என்பது “வேறுபிரிதல், நிர்மூலமாகுதல், முழுமையாக அழிக்கப்படுதல், நிர்மூலமாகுதல்” என்று பொருள்படுகிறது. அவர்கள் மரித்துப்போயினர், அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துப் போயினர், அதே சமயத்தில் அவர்கள் விருத்தசேதனம்பண்ணப்பட்ட யூதர்களாயிருந்தனர். பாருங்கள், பரிதாபமான ஜனங்களே, நாங்கள் மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் என்ற காரணத்தினால் ஒரு சிறு அறிக்கையைச் செய்துள்ளோம், அதைப் போன்றக் காரியங்கள்; நாம் விசுவாசிக்கிற விதமாகவே பிசாசும் விசுவாசிக்கிறான். ஆனால் நீங்கள் அதனோடு அடையாளங்கண்டுகொள்ள வேண்டும். தேவன் பரிசுத்த ஆவியோடு கூடிய ஒரு முத்திரையினால் அதற்கு சாட்சி பகர வேண்டும். வார்த்தையைக் குறித்தக் கேள்வியேக் கிடையாதே! நீங்களோ, “இருக்கட்டும், இப்பொழுது, அது மற்றொரு நாளுக்கானதாயிருந்தது” என்று கூறினால், அப்பொழுது ஏதோக் காரியம் தவறாய் உள்ளது. 24ஒரு மனிதன் ஓடி வந்தபோது, நீங்கள் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது என்று அவனிடம் கூறினபோது, அவனோ கட்டிடத்தின் அடித்தளத்திற்கு ஓடிச் சென்று, “நான் அதை மறுக்கிறேன். நான் அதை நிராகரிக்கிறேன். வெளிச்சம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. நான் அதை நம்புவதில்லை ” என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்? அந்த மனிதனோடு ஏதோக் காரியம் தவறாயிருக்கும். அவன் மனநிலை கோளாறு அடைந்திருந்தான். அவன் அதனுடைய வெப்பமான கதிர்களை மறுப்பானேயானால், அதனுடைய ஜீவனை அளிக்கும் ஆதாரத்தை மறுப்பானேயானால், அப்பொழுது அவனோடு மனோரீதியாக ஏதோக் காரியம் தவறாயுள்ளது. ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையைக் காணும்போது, அவனுக்கு முன்பாக தெளிவாக்கப்பட்டு, அடையாளங் கண்டுகொள்ளப்படுவதைக் காணும்போது, அதன்பின்னர் அவன் ஸ்தாபன திரைச் சீலைகளை இழுத்துவிட்டு மறைத்துக் கொண்டால், அப்பொழுது ஆவிக்குரியப் பிரகாரமாக அந்த மனிதனோடு ஏதோக் காரியம் தவறாய் உள்ளது. அவனோடு ஏதோக் காரியம் தவறாய் உள்ளது. ஆவிக்குரியப் பிரகாரமாக ஏதோக் காரியம் தவறாயுள்ளது. அவன் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. “அதை அறியாத குருடனாய்” நியாயத் தீர்ப்பிற்குச் செல்கிறான், தேவன் நியாயந்தீர்ப்பார். 25அவர்கள் - அவர்கள் இதைச் செய்தபோது கவனியுங்கள், இந்த சந்ததிகள் இப்பொழுது அதை விசுவாசித்தன, என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, ஆபிரகாமினுடைய சந்ததியாகிய அவர்களில் சிலரை நாம் ஆராய்ந்து பார்ப்போமாக. நாம் எபிரெய பிள்ளைகளை எடுத்துக் கொள்வோமாக, ஏனென்றால் அவர்கள் உண்மையாய் நின்று, சிலை - வழிபாட்டை பொறுத்துக் கொள்ள மனதில்லாதிருந்தனர். அவர்கள் அந்த தேசத்தின் இராஜா செய்திருந்த சிலைக்கு பணிய மறுத்தனர். அது ஒரு பரிசுத்த மனிதனான தானியேலின் சாயலின்படி செய்யப்பட்டிருந்தது. புறஜாதி இனம் போலியான பக்கத்தின் கீழாக, ஒரு பரிசுத்த மனிதனின் சிலையைப் பணிந்து கொள்ள கொண்டு வரப்பட்டிருந்தது என்பதைக் காண்பித்தது. ஜனங்களின் சொரூபங்களை ஆராதித்து பணிய ஜனங்கள் பலவந்தம் பண்ணப்படும்போது, அது அதேவிதமாக போகிறது. அது வெளிப்பாட்டினால் உள்ளே வருகிறது, சுவற்றின் மேல் எழுதப்பட்டிருந்த கையெழுத்தை, தானியேலால் அந்த வார்த்தையை வியாக்கியானிக்க முடிந்தது. அந்தவிதமாகவே அது உள்ளே வந்து, அந்த விதமாகவே அது வெளியேப் போகிறது, புறஜாதியாரின் சொரூபத்தைக் குறித்ததும் அதேவிதமாகவே உள்ளது. கவனியுங்கள், அவர்கள் அதைச் செய்ய மறுத்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஆபிரகாமினுடைய சந்ததியாயிருந்து வார்த்தைக்கு உண்மையாய் நின்று கொண்டிருந்தனர், அவர்கள் சத்துருவினுடைய வாசலை, அக்கினியை சுதந்தரித்துக் கொண்டனர். அவர்கள் அதைச் செய்தனர். நல்லது, தேவனுடைய வார்த்தை உண்மையுள்ளதாய் இருக்கிறது. 26தானியேல் ஒன்றான மெய்த்தேவனை ஆராதிப்பதற்காக சோதிக்கப்பட்டான். அவன் அதற்காக சோதிக்கப்பட்டான். அந்த சோதனையின் நேரத்தில், அவன் சோதனையில் நின்றான். நாம் கூறுவது போல, அது அவனுக்கான மோசமான நிலைமையாயிருந்தது போன்று காணப்பட்ட பிறகு, தேவன் என்ன செய்தார்? என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் சிங்கத்திற்கு அவனை இரையாக அளிக்கப் போவதாயிருந்தனர். ஆனால் தானியேல் அந்த சோதனைக்கு உண்மையாய்த் தரித்திருந்து, ஒன்றான மெய்த்தேவன் உண்டு என்று அறிந்து, அவன் தன்னுடைய சத்துருவின் வாசலைச் சுதந்தரித்துக் கொண்டான். தேவனோ சிங்கத்தின் வாயை அடைத்திருந்தார். மோசே சோதனையில் யந்நே, யம்பிரே என்ற போலியான பாவனையாளர்களுக்கு முன்பாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தைக்கு உண்மையாய்த் தரித்திருந்தான். பாருங்கள், தேவன் இயற்கைக்கு மேம்பட்டக் காரியத்தோடு அவனைச் சந்தித்து, இந்தக் காரியங்களைச் செய்ய போகும்படிக்கும், இந்த அடையாளங்களை காண்பிக்கவும், ஒவ்வொரு அடையாளமும் ஒரு சத்தத்தை உடையதாயிருக்கும் என்று அவனிடத்தில் கூறியிருந்தார். மோசே அங்கு புறப்பட்டுச் சென்று, அவன் அறிந்திருந்த மட்டும் அப்படியே உண்மையாயிருந்தான். அவன் கோலைத் தரையிலே போட, அது ஒரு சர்ப்பமாக மாறினது. அப்பொழுது என்ன சம்பவித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? இதோ அந்த ஆள்மாறாட்டக்காரர்களும் வந்து, அதேக் காரியத்தைச் செய்தனர். இப்பொழுது, மோசே உடனே தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, “அது முற்றிலும் தவறு என்று நான் யூகிக்கிறேன்” என்று கூறவில்லை. அவன் அங்கேயே தரித்திருந்து, தேவன் பேரில் காத்திருந்தான். அவன் உண்மையாய் தரித்திருந்தான். எத்தனை ஆள்மாறாட்டக்காரர்கள் அங்கு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அவன் உண்மையாய் தரித்திருந்தான். அவன் இந்த ஜனங்களை அந்த இடத்திலிருந்து வெளியே கொண்டு வரும்படியான தன்னுடைய கட்டளைக்கு உண்மையாய்த் தரித்திருந்த போது, அவனுடைய வழியில் குறுக்கே தண்ணீர் நின்றபோது, அவன் அதைச் சுதந்தரிக்கும்படி தேவன் அனுமதித்தார். அப்பொழுது அவனை வழி நடத்திக் கொண்டிருந்த அக்கினி ஸ்தம்பத்தினால் அவன் அந்த வாசலைத் திறந்தான். அதன்பின்னர் அவன் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டு சென்றான். 27யோசுவா மற்றொரு மகத்தான தலைவன். யோசுவா மற்றும் காலேப் என்ற இருவர் மாத்திரமே... வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றனர். அவர்கள் காதேஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தனர், அது அந்த நேரத்தில் உலகத்தின் மையமாயிருந்தது, காரணம் அது நியாயசனமாக இருந்தது. ஓ, அவர்கள் அந்த தேசத்தைச் சுற்றிப்பார்க்க பன்னிரெண்டு வேவுக்காரர்களை அனுப்பினர், அவர்கள் பன்னிருவரும் திரும்பி வந்தனர். அப்பொழுது அவர்களில் பத்து பேர், “ஓ, அது மிகவும் ஒரு கடினமானப் பணி. நாம் அதைச் சுதந்தரிக்க முடியாது. நாம் அந்த ஜனங்களுக்கு, அவர்களுக்குப் பக்கத்தில் வெட்டுக்கிளிகளைப் போலக் காணப்படுகிறோம்” என்றனர். ஆனால் யோசுவா என்ன செய்தான்? அவன் ஜனங்களை அமைதிப்படுத்தினான். அவன், “ஒரு நிமிடம் பொறுங்கள். நாம் எவ்வளவு சிறியவர்களாயிருந்தாலும் அல்லது எவ்வளவு சிறுபான்மையினராயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நாம் அதைச் சுதந்தரித்துக் கொள்ள முடியும்” என்றான். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவன், “நான் உங்களுக்கு இந்த தேசத்தைத் தருகிறேன்,” ஆனால் அதனுடைய ஒவ்வொரு அங்குலத்திற்கும் நீங்கள் போரிட வேண்டும் என்ற வாக்குத்தத்ததிற்கு உண்மையாய் நின்று கொண்டிருந்தான். தாயே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களுடைய சுகமளித்தலை உங்களுக்குக் கொடுத்து விட்டார், ஆனால் அதனுடைய ஒவ்வொரு அங்குலத்திற்கும் நீங்கள் போரிட வேண்டும். “உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் நான் உங்களுக்கு சொந்தமாகக் கொடுக்கிறேன்.” அடிச்சுவடு என்பது “உடைமையாகப் பெற்றிருத்தல்” என்று பொருள்படுகிறது. அவையாவும் உங்களுடையதாயுள்ளன, ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுக்குச் சொந்தமானதாயுள்ளது, ஆனால் நீங்கள் இப்பொழுது அந்த வழியின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் போரிட வேண்டும். 28இப்பொழுது, தேவன் என்னக் கூறினார் என்பதை யோசுவா அறிந்திருந்தான். அவன் ஒரு ஆபிரகாமின் சந்ததியாயிருந்தான். புரிகிறதா? அவன், “தேவன் நமக்கு தேசத்தைக் கொடுத்துவிட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன், நாம் அதைச் சுதந்தரித்துக் கொள்ள முடியும்” என்று கூறினான். ஏனென்றால் அவன் சோதனையில் நின்றான், முழு இஸ்ரவேலரின் கூட்டமும், எல்லா கோத்திரங்களும், எல்லா ஜனங்களும் எதிராக புலம்பி அழுதுக் கதறின. யோசுவாவோ, “அமைதியாய் இருங்கள். தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார்” என்றான். நீங்கள் எவ்வளவு பெரியவர்களயிருந்தாலும், என்ன எதிர்ப்பு இருந்தாலும், மருத்துவர் என்னக் கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை, தேவன் வாக்குத்தத்தை அறிந்துள்ளார். அதை நிறைவேற்றுவது தேவனைப் பொறுத்ததாயுள்ளது. அவன் என்ன செய்தான்? அவன் யோர்தான் நதியண்டை வந்த போது, அவன் அந்த வாசலை சுதந்தரித்தான். அதைத்தான் அவன் அவன் செய்தான். எரிகோ ஒரு ஓட்டுக்குள் இருந்த ஒரு ஆமையைப் போல மூடப்பட்டிருந்தது. அவன் என்ன செய்தான்? அவன் அந்த வாசலை சுதந்தரித்தான். அவனுடைய சத்துருவும் கூட அவனை மேற்கொள்ள ஒரு நாள் முயற்சித்துக் கொண்டிருந்தபோது, அவன் சூரியனை அப்படியே தரித்து நிற்கும்படிக் கட்டளையிட்டு, தன்னுடைய சத்துருவின் வாசலை அவ்வளவாய் சுதந்தரித்துக் கொண்டான். சூரியனோ அவனுக்கு கீழ்படிந்து, இருபத்தி நான்கு மணி நேரமும் சுழலவேயில்லை . 29தேவன் அவருடைய வாக்குத்தத்திற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார், அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் தம்முடைய வார்த்தையை தோற்கடிக்க முடியாதபடி பரலோகத்தின் வல்லமைகள் எல்லாவற்றையுமே உபயோகிப்பார். அவரால் காத்துக் கொள்ள முடியாத ஒரு வாக்குத்தத்ததை அவர் ஒருபோதும் பண்ணினதேயில்லை. “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” ஆமென். “நீ விசுவாசிக்கக் கூடுமானால் எல்லாம் கூடும்.” யோசுவா அதை விசுவாசித்தான், எனவே தேவன் பூமி சுழலுவதை நிறுத்த வேண்டியதாயிருந்தது. மற்ற ஏதோ ஒரு வல்லமையினால், அவருடைய சொந்த வல்லமையினால் அது அங்கே நிறுத்தப்பட்டது. யோசுவாதானே தன்னுடைய சத்துருவின் மேல் பழி வாங்கித் தீருமளவும் உலகமானது இருபத்தி நான்கு மணி நேரமும் சுழலவேயில்லை. அவன் வாசல்களை சுதந்தரித்துக் கொண்டான். நிச்சயமாகவே, அவன் சுதந்தரித்தான். தேவன் எப்போதுமே உண்மையுள்ளவராயிருக்கிறார். 30நாம் இன்னும் அதிகமான கதாநாயகர்களைக் குறித்துப் பார்க்க நேரமிருந்தால் நலமாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எனக்கோ இப்பொழுது ஏறக் குறைய பத்து நிமிடங்களே உள்ளன. பாருங்கள், இந்த எல்லா விலையேறப்பெற்ற கதாநாயகர்களும், அவர்கள் விசுவாசத்தின் மகத்தான வீரர்களாயிருந்தபோது, அவர்கள் யாவரும் மரணத்தின் வாசலண்டையே மரித்துப் போயினர். அவர்கள் யாவரும் சரியாக மரணத்தின் வாசலண்டையிலே அழிந்து போயினர். அதன்பின்னர் ஆபிரகாமின் ராஜரீக வித்தும் கூட வந்தார். அவர்கள் எல்லோருமே ஈசாக்கிலிருந்து வந்த மாம்சபிரகாரமான சந்ததியாயிருந்தனர். ஆனால் இங்கே ஆபிரகாமின் ராஜரீக சந்ததி வந்தார், அது கிறிஸ்துவாயிருந்தது, ஆபிரகாமினுடைய விசுவாச சந்ததியார்; நாம் என்னவாய் இருக்க வேண்டுமோ, அந்த விதமாக நாம் எப்படி இருக்கிறோமா அல்லது இல்லையா என்று பார்ப்போம். மாம்சபிரகாரமான சந்ததி ஒரு மாதிரியாய் மாத்திரமே இருந்தது. மற்ற யாவரும் மாம்சபிரகாரமாக பிறந்திருந்தனர், ஆனால் அவர் ஒரு கன்னிப் பிறப்பாய் வந்தார். பாருங்கள், அது ஆபிரகாமின் சந்ததியாயிருக்கவில்லை , அப்பொழுது, ஒரு யூதன். அவர் விசுவாச சந்ததியின் வாக்குத்தத்தத்தின் மூலம் வந்தார். ஆகையால் நாம் இந்த மனிதனூடாக அவருடைய பிள்ளைகளாயிருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 31அவர் என்ன செய்தார் என்று கவனியுங்கள். அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர் ஜெயங்கொண்டு, அவருக்கிருந்த ஒவ்வொரு சத்துருவின் வாசலையும் சுதந்தரித்துக் கொண்டார்; ராஜரீக வித்து. அவர் அதை வார்த்தையினால் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். அவர் அதை ஜெயங்கொண்டார். அவர் நமக்காக சுகவீனத்தின் வாசலை ஜெயித்தார். அதைச் செய்யவே அவர் வந்தார். அவர், சுகவீனமுள்ள ஜனங்களே, நினைவிருக்கட்டும், அவர் அந்த வாசலை ஜெயித்தார். எனவே நீங்கள் அதை ஜெயங்கொள்ள வேண்டியதில்லை; அவர் அதை ஜெயித்தார். மற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த வாசலை ஜெயங்கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆனால் நீங்கள் ஜெயங்கொள்ள வேண்டியதில்லை; அது ஏற்கெனவே ஜெயங்கொள்ளப்பட்டாயிற்று. அவர் சுகவீனத்தின் வாசல்களை ஜெயங்கொண்டார். அவர் சுகவீனத்தின் வாசல்களை ஜெயங்கொண்டபோது, அவர் என்ன செய்தார்? உதாரணமாக அவர். நீங்கள் பூமியிலே கேட்டுக்கொள்வது எதுவோ, நீங்கள் பூமியிலே கட்டுவது எதுவோ, அவர் அதை பரலோகத்தில் கட்டுவார், வாசலின் திறவுகோல்களை நமக்கு கொடுத்திருக்கிறார். அவர் வார்த்தையினால் சோதனையின் வாசலை ஜெயித்தார். அந்த திறவுகோல்கள், “சத்துருவுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்” என்பதாயிருந்தன. அவர் அவை எல்லாவற்றையும் ஜெயித்துவிட்டார்; ஒவ்வொரு சுகவீனத்தையும் ஜெயித்துவிட்டார். அவர் மரணத்தை ஜெயித்தார், அவர் பாதாளத்தை ஜெயித்தார். அவர் மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தார். மற்றவர்கள் ஜெயங்கொள்ள முடியாததை அவர் ஜெயங்கொண்டார், ஏனென்றால் அவர்கள் எல்லோரும் மாம்ச பிரகாரமான சந்ததியாயிருக்கின்றனர். இதுவோ ஆவிக்குரிய சந்ததியாய் உள்ளது. அவர் கல்லறையின் வாசலை ஜெயங்கொண்டு, நம்மை நீதிமான்களாக்க மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். “நாம் இப்பொழுது முற்றிலும்ஜெயங்கொள்ளு கிறவர்களாயிருக்கிறோம். நாம், ”முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக“ சுதந்தரமாக அதற்குள் நடந்து செல்கிறோம். இப்பொழுது நாம் தோற்கடிக்கப்பட்ட ஒரு சத்துருவோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சுகவீனம் தோற்கடிக்கப்பட்டாயிற்று. மரணம் தோற்கடிக்கப்பட்டாயிற்று. பாதாளம் தோற்கடிக்கப்பட்டாயிற்று. ஒவ்வொரு காரியமும் தோற்கடிக்கப்பட்டாயிற்று. ஓ, என்னே! என்னுடைய உருவம் இருமடங்கு பெரியதாயிருந்திருந்தால், அப்பொழுது நான் இருமடங்கு நலமாயிருப்பதை உணர்ந்திருப்பேன். நாம் ஜெயங்கொள்ளப்பட்ட ஒரு சத்துருவோடே வாதிட்டுக் கொண்டிருக்கிறோம். 32அவர்கள் பவுலினுடைய தலையைத் துண்டிக்க ஒரு மேடையைக் கட்டிக் கொண்டிருந்தபோது, அவன், “ஓ மரணமே, உன் கூர் எங்கே? நீ என்னை எங்கே நிம்மதியற்றவனாகி, சத்தமிடச் செய்ய முடியும் என்பதை எனக்குக் காண்பி. பாதாளமே, உன் ஜெயம் எங்கே? நீ என்னை அங்கே மூடிவிட முடியும் என்று நீ நினைக்கிறாயா? நான் உனக்கு அங்கு உள்ள ஒரு காலியானக் கல்லறைச் சுட்டிக் காண்பிப்பேன்; நான் அவருக்குள் இருக்கிறேன், அவர் என்னைக் கடைசி நாளில் எழுப்புவார்” என்று கூற முடிந்ததில் வியப்பொன்றுமில்லையே, ஒரு தோற்கடிக்கப்பட்ட சத்துரு! ஆபிரகாமின் ராஜரீக வித்து! இப்பொழுது, மாம்சபிரகாரமான சந்ததியால் அதைச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனால் ராஜரீக வித்தினால் ஜெயங்கொள்ள முடிந்தபடியால், ஏற்கெனவே ஜெயங்கொண்டாயிற்று, ஏனென்றால் அவர் நமக்கு முன்பாகச் சென்று, நமக்காக ஒவ்வொரு வாசலையும் ஜெயங்கொண்டார். அவர் இப்பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நமக்கு மத்தியில் வல்லமையுள்ள ஜெயவீரராக நிற்கிறார். அவர் சுகவீனத்தை மாத்திரம் ஜெயங்கொள்ளவில்லை. அவர் சுகவீனத்தை ஜெயங்கொண்டார். அவர் சோதனையை ஜெயங்கொண்டார். அவர் ஒவ்வொரு சத்துருவையும் ஜெயங்கொண்டார். அவர் மரணத்தை ஜெயங்கொண்டார். அவர் பாதாளத்தை ஜெயங்கொண்டார். அவர் கல்லறையை ஜெயங்கொண்டு, மீண்டும் உயிரோடெழும்பினார். இரண்டாயிரம் வருடங்கள் கழித்து, இங்கே அவர் நமக்கு மத்தியில் நின்று, இந்த பிற்பகல் வேளையில் தம்மை வல்லமையுள்ள ஜெயவீரராக அடையாளங் காட்டுகிறாரே! ஆமென். அவர் இன்னமும் இங்கே உயிருள்ளவராக இருந்து கொண்டு, தம்முடைய வாக்குத்தத்ததை ரூபகாரப்படுத்திக் கொண்டிருக்கிற ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாயிருக்கிறாரே! ஓ, என்னே ! சத்துருவோ ... 33“அவர் தம்முடைய சத்துருவின் வாசல்களை ஜெயங்கொள்வார்.” அந்த சந்ததிக்கு, அவர் யாருக்கு தம்மை ரூபகாரப்படுத்த இங்கே உயிரோடு நிற்கிறார்? அந்த முன் குறிக்கப்பட்ட வித்துக்கள் அதைக் காணமுடியும். அவர் அதை ஜெயங்கொண்டார். யார், அவருடைய சோதனைக்குப் பிறகு, வார்த்தையின் வாக்குத்தத்தத்தினைக் கொண்டு, அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக, பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டு, அவர்களுக்கு உறுதிபடுத்தப்பட்டது (என்ன?) எபிரெயர் 13:8ன் படியேயாகும். அவர்கள் பரிசுத்த ஆவியினால் அங்கே முத்திரையிடப்பட்டிருக்கின்றனர், அந்த பரிசுத்த ஆவியாயிருந்த ஆபிரகாம் அதை முன்னரேக் கண்டான்; அவன் அதை விசுவாசத்தின் மூலமே விசுவாசித்தான். நாம் இப்பொழுது அதை ஏற்றுக்கொண்டு, அவர் என்னக் கூறினார் என்ற வாக்குத்தத்தத்தையே திரும்பிப் பார்க்கிறோம். யோவான் 14:12 உயிர்த்தெழுந்த ஜெயவீரரால் தாமே இந்தக் கடைசி நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏதோ ஒரு முறைமையினால் அல்ல; ஆனால் ஒரு நபரால், கிறிஸ்துவினால், ஜெயவீரராலேயாகும். என்னுடைய சபையினால் அல்ல, என்னுடைய பாப்டிஸ்டு சபையினால் அல்ல, அல்லது உங்களுடைய பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்டு அல்லது பெந்தேகோஸ்தேக்களினால் அல்ல, அதன் மூலமாயல்ல; ஆனால் இயேசு கிறிஸ்துவினாலேயாம். அவர் இன்றைக்கு ஜீவிக்கிறார். அவர் நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார். 34அவர் பிழைத்திருக்கிறபடியால், நாமும் கூட பிழைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும், ஒரு பகுதி வார்த்தையினால் அல்ல, ”ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.“ ”நானே உயிரித்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா?“ என்றார். ஒவ்வொரு சத்துருவின் வாசலையும் கைப்பற்றுதல்! தேவன். அவனால் எப்படி பாஸ்வர்த் அவர்களை ஜெயங்கொள்ள முடியும்? பாஸ்வர்த் ஜெயவீரருக்குள் இருந்தார். அந்தக் காரணத்தினால்தான் அவர், “இப்பொழுது இதுவே என்னுடைய ஜீவியத்தின் மிக மகிழ்ச்சியான வேளை” என்றார். ஊ - ஊ. அவர் அந்த வல்லமையுள்ள ஜெயவீரரை அறிந்திருந்தார். அவருடைய உறுதி அவரோடு சார்ந்திருந்தது. ஓ, என்னே ! இப்பொழுதோ நம்மால் பாட முடியும்: ஜீவிக்கும்போது அவர் என்னை நேசித்தார்; மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம்பண்ணப்படும்போது, அவர் என்னுடைய பாவங்களை அதிதூரம் கொண்டு சென்றார்; உயிர்த்தெழுந்தபோது, அவர் என்னை இலவசமாய் என்றென்றுமாய் நீதிமானாக்கினார்; என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், ஓ மகிமையான நாள்! 35தோற்கடிக்கப்படுவது போன்று தென்பட்டவர்களுக்கோ, எடி பெரோனெட் அவர்கள்தான் என்று நான் நினைக்கிறேன், அவரால் தன்னுடைய கிறிஸ்தவ பாடல்களை விற்க முடியவில்லை. யாருக்குமே அவைகள் தேவைப்படவில்லை. அவர்களால் அதனோடு ஒன்றுமே செய்ய முடியாததாயிருந்தது. ஓ, தோற்கடிக்கப்பட்ட, ஒரு விசுவாசி! ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் வந்தார். அவருடைய சத்துருவின் வாசல், அது அவருடைய பாடலின் எழுத்துத் தொகுப்பினை ஏற்க மனதாயில்லையே! ஆவியானவர் அவரைத் தொட்டபொழுது, அவர் ஒரு பேனாவை பிடித்தார், அப்பொழுது தேவன் முதலில் ஒரு பாடலை எழுத்த துவங்க அனுமதித்தார். இயேசுவின் நாமத்தின் வல்லமைக்கே எல்லா வாழ்த்துமாம்! தூதர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து பணியட்டும்; ராஜ முடியைக் கொண்டு வந்து, எல்லாருக்கும் கர்த்தரான அவருக்கு முடிசூட்டுங்கள். 36குருடான பேனி கிராஸ்பி அவர்களிடம் ஒரு சமயம், “இது உனக்கு எதைப் பொருட்படுத்துகிறது” என்று கேட்டனர். சில ... பெந்தேகோஸ்தே எல்விஸ் பிரஸ்லி செய்தது போல் அல்லது கிறிஸ்துவின் சபை என்ற ஸ்தாபனத்தைச் சார்ந்த பூன் அவர்கள் செய்தது போல் அல்லது ரெட் போலி அவர்கள் செய்தது போல, பேனி கிராஸ்பி தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுவிடவில்லை, இவர்களே தங்களுடைய திறமைகளை உலகத்திற்கு விற்றுக் கொண்டிருக்கின்றனர்; அதினால் அவர்கள் காடில்லாக் கார்களையும், பத்து இலட்சம் டாலர்களையும், தங்க பரிசுகளையும் பெற்றுள்ளனர். ஆனால் பேனி கிராஸ்பி தன்னுடைய ஸ்தானத்திற்கு உண்மையாய் தரித்திருந்தாள். அவள் கதறினாள்: ஓ சாந்தமான இரட்சகரே, என்னைக் கடந்து செல்லாதேயும், என்னுடைய தாழ்மையான கூக்குரலுக்கு செவிகொடும்; மற்றவர்கள் உம்மை கூப்பிட்டுக் கொண்டிருக்கையில், என்னைக் கடந்து சென்றுவிடாதேயும். நீரே என்னுடைய ஆறுதல் எல்லாவற்றிற்குமான ஓடை, என் ஜீவனைப் பார்க்கிலும் மேலானவர், பூலோகத்தில் உம்மைத் தவிர வேறு யார் எனக்கு உண்டு? அல்லது பரலோகத்தில் உம்மையல்லாமல் யார் எனக்கு உண்டு? அவர்கள், “நீ பரலோகத்திற்கு செல்லும்போது குருடாயிருந்தால் எப்படியிருக்கும்?” என்று கேட்டனர். அப்பொழுது அவள், “நான் எப்படியும் அவரை அறிந்து கொள்வேன்” என்றாள். அதற்கு அவர்களோ, “நீ எப்படி அவரை அறிந்து கொள்வாய்?” என்று கேட்டனர். அப்பொழுது அவள், “நான் அவரை அறிந்து கொள்வேன்” என்றாள். அதற்கு அவர்கள், “திருமதி.கிராஸ்பி, உன்னால் பத்து இலட்சம் டாலர்களை சம்பாதிக்க முடியும்” என்றனர். அப்பொழுது அவளோ, “எனக்கு பத்து இலட்சம் டாலர்கள் வேண்டாம்” என்றாள். மேலும், “நீ எப்படி அவரை அறிந்து கொள்வாய்?” என்று கேட்டனர். அதற்கு அவள், இவ்வாறு கூறினாள்: நான் அவரை அறிந்து கொள்வேன், நான் நான் அவரை அறிந்து கொள்வேன், மீட்கப்பட்டவர்களோடு அவருடைய பக்கத்தில் நான் நின்று, நான் அவரை அறிந்து கொள்வேன், நான் அவரை அறிந்து கொள்வேன். “என்னால் அவரைக் காண முடியவில்லையென்றால், நான் அவருடைய கரங்களில் ஆணிகள் கடாவப்பட்ட தழும்புகளைத் தடவிப்பார்த்து உணர்ந்து கொள்வேன்.” அவள் தன்னுடைய சத்துருவின் வாசலை ஜெயங்கொண்டாள். ஆம். 37நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நலமாயிருக்கும்! அவர், “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், உங்களுக்கு எந்தத் திறவுகோல் தேவைப்படுகிறதோ அதைக் கேளுங்கள், எந்த வாசலை நீங்கள் சுதந்தரிக்க வேண்டுமோ அதைக் கேளுங்கள்; நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுவதெதுவோ, அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் தரித்திருந்தால், உங்களுக்கு முன்பாக வருகிற எந்த சத்துருவினுடைய வாசலையும் சுதந்தரித்துக் கொள்ள முடியும்” என்றார். நீங்கள் ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாயிருக்கிறீர்கள். உங்களுக்கு முன்பாக எந்தவிதமான ஒரு வாசல் நிற்கிறது? அது சுகவீனமாயிருந்தால், நீங்கள் அதற்காக முற்றிலும் கொள்ளுகிறவர்களாயிருக்கிறீர்கள். அப்படியானால் நம்மால் இவ்வாறு கூறி, இந்த கிருபையுள்ள பழைய பாடலைப் பாட முடியும்: புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையதாயுள்ளது, ஒவ்வொரு அதிகாரமும், ஒவ்வொரு வசனமும்... மிகவும் தெய்வீகமானது, அவருடைய தெய்வீக அன்பில் நான் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையதாயுள்ளது. நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம், ஆபிரகாமின் சந்த்தி சத்துருவின் வாசலை சுதந்தரித்துக்கொள்ளுமே! இந்தக் காரியங்கள் சம்பவிக்க முடியாது என்று அவர்கள் கூறும்போது, அவர்கள் அதை ஒரு பிசாசு அல்லது பெயல்செபூல் அல்லது மற்ற வேறெதோ ஒன்று என்று அழைக்க விரும்பும்போது, தேவன் நிச்சயமாகவே ஒவ்வொரு வாசலையும் ஜெயங்கொண்டு, சத்துருவை மேற்கொள்கிறார். நாம் ஜெபம் செய்வோமாக. 38கர்த்தாவே, ஒருகால் ஆபிரகாமின் சந்ததி. கர்த்தாவே, அவர்கள் அதைக் காண்பார்கள் என்பதை நான் அறிவேன். எப்படி வார்த்தையானது அந்த உண்மையான நிலத்தில் படாமல் விழ முடியும்? அவர்கள் இப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஜெப வரிசையில் வருகிற ஒவ்வொரு நபரும் குணமடைவார்களாக. கர்த்தாவே, இன்னும் இங்கு வேறு யாராவது இன்னமும் தங்களுடைய அறிக்கையை செய்யாமல், பகிரங்கமாக நிற்காமல், கிறிஸ்துவுக்காக நிற்காமலிருந்திருந்தால், எல்லா குளிர்ந்த, சம்பிரதாயமான கோட்பாடுகளையும் மறுக்க ஆயத்தமாகியிருந்தால், மரித்த காரியங்களை அவர்களிடத்திலிருந்து நீரே தூரமாய் எடுத்துப் போடும். அவர்கள் இப்பொழுதே நின்று, “நான் அவரை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்வேன்” என்று கூறுவார்களாக. அப்பொழுது நீர் அந்த நாளில் அவர்களுக்காக நிற்பீர். 39நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தியிருக்கையில், அவர்கள் ஜெபத்திற்காக சற்று நேரம் நிற்க வேண்டும் என்று விரும்புவார்களேயானால், “நான் அவருக்காக இப்பொழுது நிற்க விரும்புகிறேன், அப்பொழுது அந்த நாளிலே அவருடைய தெய்வீகப் பிரசன்னத்தில் அவர் எனக்காக நிற்பார்” என்று கூறுவார்களாக. நீங்கள் நிற்பீர்களேயானால், உங்களுடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில் காணப்படும்படியான தருணத்தை உங்களுக்கு அளிக்க நான் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் எந்த சபையிலாவது சேர்ந்து கொள்ளும்படி நான் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் இங்கிருந்து, அவரை அறியாமலிருந்தால், நீங்கள் கிறிஸ்துவினிடத்திற்கு வரும்படிக்கே நான் உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மற்ற யாரேனும், “நான் - நான் இப்பொழுது நிற்க விரும்புகிறேன்” என்று கூறுகிறீர்களா? பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என் சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. “நான்... விரும்புகிறேன்.” தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. “நான் இந்தப் பிற்பகல் என்னுடைய தீர்மானத்தை எடுத்துக் கொள்கிறேன்.” இந்த அருமையான ஜனங்கள், புருஷரும், ஸ்தீரிகளும் எழும்பி நின்று, “நான் இந்தப் பிற்பகலில் என்னுடைய தீர்மானத்தை எடுத்துக் கொள்வேன்” என்று கூறுவார்களாக. அந்த நாளிலே மருத்துவர், “விபத்தின் அழிவு, அவருடைய இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது, மரணம் அவர் மீது அல்லது அவள் மீது வந்துள்ளது” என்று கூறுகிறபோது, இல்லையென்றால் ஒருநாள் காலையில் நீ உன்னுடைய தீர்மானத்தை நினைவு கூருவாய். நீங்கள் இப்பொழுது அவருக்காக நிற்கிறீர்கள். “நீங்கள் மனுஷருக்கு முன்பாக என்னைக் குறித்து வெட்கப்படுவீர்களேயானால், நானும் என் பிதாவுக்கு முன்பாகவும், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் உங்களைக் குறித்து வெட்கப்படுவேன். ஆனால் நீங்கள் மனுஷருக்கு முன்பாக என்னைக் குறித்து அறிக்கை செய்தால், நானும் என் பிதாவிற்கு முன்பாகவும், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அவனைக் குறித்து அறிக்கை செய்வேன்.” 40என் சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே மாடியின் முகப்பில் எங்காவது வேறு யாரேனும் இருக்கிறீர்களா? நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில் இப்பொழுதேக் கூறுங்கள். அவர்களில் சிலர், கட்டிடத்தின் மையத்தில் அதிகம் பேர் இருக்கிறார்களா? சரி. நண்பனே, நான் உங்களுடைய வார்த்தையின்படியே உங்களை ஏற்றுக் கொள்கிறேன். வார்த்தையானது வளமான நிலத்தில் விழுமேயானால், கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயைப் போல், அவள் அவள் புரிந்துகொண்டாள். அவள்... உலகத்தோற்றமுதல் பரலோகத்தில் சுட்டிக்காட்டப்பட்டாள். அந்த வெளிச்சம் அதில் பட்டவுடனே, அவள் அதை அடையாளங்கண்டு கொண்டாள். என் சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது ஒரு தீரமானதாயுள்ளது. என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் மகத்தான காரியங்களைச் செய்திருக்கலாம்; நீங்கள் எப்போதும் செய்ததிலேயே மகத்தான காரியத்தை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறீர்கள், அது கிறிஸ்துவுக்காக நிற்பதேயாகும். 41எங்கள் பரலோகப் பிதாவே, இந்த பிற்பகலில் வித்தானது சில நிலத்தின் மேல் விழுந்துள்ளது. நாங்கள் ஜீவனானது முளைத்தெழும்புகிறதைக் காண்கிறோம். புருஷரும், ஸ்திரீகளும் தங்களுடைய காலூன்றி எழும்பி நிற்கின்றனர், சர்வ வியாபியாயும், சகலமும் அறிந்தவராயும், சர்வ வல்லமையும் படைத்த எல்லாவற்றையும் காண்கிற தேவனுடைய கண் அவர்களைக் காண்கிறது. பிதாவே, அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். நான் அவர்களை இப்பொழுது வெற்றிச் சின்னங்களாக உம்மிடத்தில் அளிக்கிறேன். இப்பொழுது அங்கே நின்று கொண்டிருக்கிற அவர்களுடைய இந்த அனுபமானது, அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, இது எதைப் பொருட்படுத்துகிறது என்பதை அறிந்து, கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலரோடு தங்களுடைய தீர்மானத்தை எடுக்கும்படிக்கு அவர்கள் நிற்பார்களாக. அவர்கள் அந்த நாளிலே உம்முடைய பிரசன்னத்தில் நிற்கும் வரையில் அவர்கள் எப்போதும் உண்மையாய் நிலைத்திருப்பார்களாக, அப்பொழுது அந்த அழகான் சத்தம், “ஆம், ஒரு நாள் பாட்டன் ரோக் என்ற இடத்தில் இல்லை டென்ஹாம் ஸ்பிரிங்ஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு இடத்தில் அவன் எனக்காக நின்றான். பிதாவே, இப்பொழுது நான் அவனுக்காக அல்லது அவளுக்காக நிற்பேன்” என்று கூறும். கர்த்தாவே இதை அருளும். அவர்கள் இயேசுவின் நாமத்தில் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். ஆமென். தேவன் உங்களுடைய தீர்மானத்திற்காக உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் எப்போதும்... இப்பொழுது இந்த ஒரு காரியத்தை எனக்காகச் செய்யுங்கள். உங்களைச் சுற்றிலும் எங்கே இந்தப் போதகர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு, ஒரு சிலரைப் பார்த்து, அவர்களிடத்தில் பேசுங்கள். நீங்கள் இன்னமும் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பண்ணப்படாமலிருந்தால், ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களை விசுவாசிகளுக்கு மத்தியில், உண்மையான விசுவாசிக்களுக்கு மத்தியில், பாவனை விசுவாசிகளுக்கு மத்தியில் அல்ல, உண்மையான விசுவாசிகளுக்கு மத்தியில் இணைத்துக் கொள்ளுங்கள். நாம் ஜெபித்துக் கொண்டிருக்கையில், நாம் இந்த உறுமால்களுக்காக ஜெபிப்போமாக. 42பரலோகப் பிதாவே, இந்த உருமால்கள் இப்பொழுது வெளியே செல்கின்றன. எனக்கு அவை எங்கே செல்கின்றன என்று தெரியாது. ஒருகால் ஒரு பார்வையற்ற வயோதிகத் தந்தை இங்கே எங்கோ ஒரு சிறு சேற்றுச் சகதியில் இந்த உறுமால் வருவதற்காக அமர்ந்து கொண்டு காத்துக் கொண்டிருக்கலாம்; ஒரு சிறு குழந்தை அங்கே மருத்துவமனைப் படுக்கையின் மேல் படுத்துக் கொண்டிருக்கலாம்; ஒரு தாய் நின்றுகொண்டு பரபரப்புடன் உறுமால் திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கலாம். பரலோகப் பிதாவே, நீர் அவைகளோடே செல்லும் என்றே நான் ஜெபிக்கிறேன். இன்றைக்கு உம்முடைய பிரசன்னத்தின் ஒரு அடையாளமாக, நாங்கள் உம்முடைய வார்த்தையை பிரசங்கித்துள்ளபடியால், உம்மில் உள்ள எங்களுடைய விசுவாசம், ஆபிரகாமுக்குள்ளிருந்த விசுவாசம், இயேசு கிறிஸ்துவினால் உருவாக்கப்பட்டு, எங்களிடத்திற்கு கொடுக்கப்பட்ட விசுவாசமானது, இந்த உறுமால்களோடு சென்று, அது வைக்கப்படுகின்ற ஒவ்வொருவரையும் குணப்படுத்துவதாக. நாங்கள் அவைகளை இயேசு நாமத்தில் அனுப்புகிறோம். ஆமென். 43இப்பொழுது நாம் ஜெப் வரிசையை அழைப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் அப்படியே இருங்கள். சர்வ வல்லமை படைத்த, வல்லமையுள்ள தேவன், மகத்தான ஒருவர், எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவர். தயவு செய்து நண்பர்களே, நான்- நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் துவங்கப் போகிறேன், நான்.. அநேகமாக, நாங்கள் கிழே வரும்போது, நான்- நான் உங்களுக்கு கூறும்படிக்கு எந்தக் காரியத்தையும் பெற்றுக்கொள்ளாமலிருக்கலாம்; உங்களில் சிலர் அந்த நேரத்திற்கு முன்னரே போய்விடலாம். நீங்கள் என்னவாயிருந்தாலும், நீங்கள் கொஞ்ச நேரத்துக்கு முன்னர் நிற்காமலிருந்தாலும் கூட, நீங்கள் நிச்சயமில்லாமல்... நீங்கள் ஒரு சபையின் ஒரு அங்கத்தினராயிருந்தால், அது ஒரு நல்லக் காரியம்தான், ஆனால் அது போதுமானதல்ல. பாருங்கள், அந்த ஐஸ்வரியமான வாலிப, அதிபதி சபையின் ஒரு அங்கத்தினனாயிருந்தான். புரிகிறதா? அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள தான் என்ன செய்ய வேண்டும் என்று இயேசுவினிடத்தில் கேட்டான். அவன் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவன் நடந்து சென்று விட்டான். அந்த வாலிபன் என்ன ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தான். அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். அவன் அடையாளங்கண்டு கொள்ளப்பட்ட கடைசி நேரம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? கொஞ்சங் கழித்து அவன் செழித்தான். அவன் ஐஸ்வரியவானான். அவனுடைய களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தோடுமளவிற்கு அவன் ஒரு நிலையினை அடைந்தான். ஆனால் அதன்பின்னர் நாம் அவனுடைய கடைசி அடையாளத்தை நரகத்தில், அக்கினி ஜூவாலையில் வேதனைப்படுவதில் கண்டடைகிறோம். அது உங்களுக்கு சம்பவிக்க அனுமதிக்காதீர்கள், வேண்டாம். கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள். 44வாலிப ஜனங்களாகிய நீங்கள், வாலிபப் பெண்களாகிய நீங்கள், வாழ்க்கையின் திருப்பத்திலே தயவு செய்து அதைச் செய்யுங்கள். உங்களுடைய சகோதரரான, உங்களை நேசிக்கிற ஒருவனாகிய எனக்கு செவிகொடுங்கள். நான் உங்களை நேசிக்கிறபடியால் நான் இங்கே இருக்கிறேன். நான் தேவனை நேசிக்கிறேன், நான் உங்களையும் நேசிக்கிறேன், நான் உங்களை நேசிக்கவில்லையென்றால், என்னால் தேவனை நேசிக்க முடியாது. சரியாக கூறினால், நீங்கள் ஒரு புகழுரையைக் கூற வேண்டுமென்றிருந்தால், அதை அங்கே உள்ள என் மகனுக்கு அல்லது என்னுடைய பிள்ளைகளில் ஒருவருக்குக் கூற வேண்டும் என்றே நான் விரும்புவேன். நான் அப்படியே நான், நான் அந்த புகழுரை இல்லாமலேயேப் போய்விடுவேன். எந்தப் பெற்றோரும் அதையேச் செய்வார்கள்; எனவே தேவனும் அவ்வண்ணமே செய்வார். புரிகிறதா? அவருடைய ஜனங்களை நேசியுங்கள். ஒருவரையொருவர் நேசியுங்கள். நீங்களோ, “நீர் அவர்களை எதற்காக திட்டுகிறீர்?” என்று கேட்கலாம். அசலான அன்பு திருத்துதலாய் உள்ளது. உங்களுடைய பிள்ளை வீதியிலே உட்கார்ந்து கொண்டிருந்தால், அப்பொழுது நீங்கள், “நல்லது, சிறுவனே அங்கே அமர்ந்திரு. அவன் அதைச் செய்யக் கூடாது, ஆனால் நான் அவனுடைய சிறு உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை” என்று கூறினால், நீங்கள் அவனை நேசிக்கவில்லை. அவன் அங்கேயே கொல்லப்படுவான். நீங்கள் அவனை நேசிப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் அவனை உள்ளே அழைத்து வந்து, அவனுக்கு ஒரு அடி கொடுப்பீர்கள். நீங்கள் அவனைக் கீழ்ப்படியச் செய்வீர்கள். அந்த விதமாகவே தேவன் செய்கிறார். அன்பு திருத்துகிறதாய் உள்ளது, அது அசலான அன்பாய் உள்ளது. 45ஒரு பிரசங்கியார் நின்று, ஸ்திரீகளாகிய உங்களை உங்களுடைய தலை முடியை குட்டையாக வெட்டுக் கொள்ளவும், வர்ணம் பூசவும், அது போன்றவைகளை உபயோகிக்கவும் அனுமதிக்கும்போது, உங்களை திருத்துகிறதில்லை, அசலான அன்பே அங்கு இல்லை, அதை தவறு என்று அழைக்கமாட்டார்கள். நீங்கள் புருஷர்கள் மூன்று அல்லது நான்கு முறை விவாகம் செய்யவும், இன்னும் இந்த எல்லா மற்றக் காரியங்களையும் செய்ய அனுமதித்துவிட்டு, அதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடப் பார்க்கிறீர்கள், அங்கே அசலான அன்பே இருக்கவில்லை. நீங்கள் ஒரு சபையைச் சேர்ந்து கொள்ள அனுமதித்துவிட்டு, உங்களை முதுகிலேத் தட்டிக் கொடுத்து, உங்களை ஏதோ ஒரு கோட்பாட்டினால் திக்குமுக்காடச் செய்துவிட்டு, பின்னர், “நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான், அதாவது பரிசுத்த சபையை சேர்ந்து கொள்வதேயாகும்” என்றால், அங்கே அன்பே இல்லை. இல்லையென்றால் அந்த மனிதன்தாமே முழுவதும் இழக்கப்பட்டிருக்கிறான், அவன் புரிந்து கொள்ளவில்லை. அசலான அன்பு திருத்துகிறாய் இருந்து, தேவனுடைய வார்த்தைக்கு உங்களைத் திரும்பக் கொண்டுவருகிறது. இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவர் எப்படி, என்னக் கூறினார் என்று பாருங்கள், ஏனென்றால் அவர் அவர்களை நேசித்தார், அவர்கள் அவருடைய இரத்தத்திற்காக கூப்பிட்டுக் கொண்டிருந்தபோதும் கூட, அவர்களுடைய ஸ்தானத்தில் அவர் மரித்தார். 46இப்பொழுது மகத்தான பரிசுத்த ஆவியானவர். நான் ஒரு நிமிடம் அப்படியே காத்திருக்க வேண்டும். நாம் துவங்குவதற்கு முன்னர், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என் மீது வரும்வரையில் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் பிரசங்கித்துகொண்டே வருகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பிற்காக உங்களுக்கு நன்றி. இப்பொழுது, இங்கு உள்ள ஒவ்வொருவரும், நீங்கள் எங்கே இருந்தாலும், கட்டிடத்தில் எங்கேயிருந்தாலும், அப்படியே ஒரு நிமிடம் ஜெபம் செய்யுங்கள், “கர்த்தராகிய இயேசுவே, எனக்கு உதவி செய்யும்! எனக்கு உதவு செய்யும் ! நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொடட்டும்” என்று கூறுங்கள். இயேசு கூறினார், உங்களுக்குத் தெரியுமா? அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபோது, அவர் சரீரப்பிரகாரமாக அதை உணரவில்லை . ஆனால் அவர் திரும்பி சுற்றிப் பார்த்து, அவள் யாராயிருந்தாள் என்றும், அவள் என்ன செய்தாள் என்றும் அறிந்திருந்தார். இந்தப் பிற்பகலில் அவர் அதே மாறாத இயேசுவாய் இருக்கிறார், நம்முடைய பெலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடிய ஒரு பிரதான ஆசாரியராய் இருக்கிறார். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் அது உண்மை என்றும், இந்த வாக்குத்தத்தத்தைப் பண்ணின தேவன் இன்னும் ஒரு முறை (அவர் அதைக் காண்பிக்கலாம்) என்றும், நாம் சோதோமின் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்தக் கட்டிடத்தில் அதை எத்தனைப்பேர் விசுவாசிக்கிறீர்கள், அப்படியே உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அது சோதோமில் இருந்தது போன்றே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முழு அமைப்பு முறையும், உலக அமைப்பு முறையும், ஒவ்வொரு காரியமும், சபை அமைப்பு முறையும் மாசுபடிந்ததாகிவிட்டது. எந்தக் காரியமும் இல்லை . அரசியல் மிகவும் சீர்கேடடைந்துள்ளது. முறைமைகள், எங்கும், நம்முடைய சர்வாதிகாரிகள், அவை யாவும் சீர்கேடாய் உள்ளது. சபையும் அதேவிதமாக மாறியுள்ளது. குடும்பங்களும் அதேவிதமாக மாறியுள்ளன. அது அப்படியே சீர்கேடாய் உள்ளது, சோதோமாயிற்றே! அப்பொழுது நினைவிருக்கட்டும், தேவன் அதை உங்களுக்கு முன்பாக வைத்துள்ளார், அப்பொழுது அவர் தம்மை மாம்ச சரீரத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் காட்சியில் வரும்முன், சரீரத்தில் வெளிப்படுத்துவார் என்றும், சோதோமுக்கு முன்னர் அவர் செய்த்தைப் போன்றே செய்வார் என்பதும் நினைவிருக்கட்டும். அவர் முதல் முறை செய்ததுபோல் அதை அறிமுகம் செய்ய, அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்கு முன்னோடியாக ஒருவரை அனுப்புவதாக அவர் வாக்களித்தார். மேலும் அவர், “மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுகின்ற போதும்” என்றார். 47எனக்கு உங்களைத் தெரியாது. குமாரி தாம்ஸன் அவர்களே, அது ஸ்திரீகளுக்கான கோளாறு மற்றும் சிக்கல்கள், தேவன் உங்களை குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களால் அதை விசுவாசிக்க முடியுமா? நீங்கள் விசுவாசிப்பீர்களா? குமாரி, குமாரி தாமஸ், அவர் உங்களை குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சரியாக உங்களுக்குப் பின்னால் ஒரு பெண்மணி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் வலியுடைய மூட்டு வீக்கத்தை உடையவளாயிருக்கிறாள். அவளுக்குப் பக்கத்தில் ஒருவள் உட்கார்ந்து கொண்டு வயிற்று வலியோடு ஜெபித்துக் கொண்டும் கூட இருக்கிறாள். நீங்கள் அது இல்லாமற் போவதை உணரப் போகிறீர்கள், நீங்கள் கவனிக்கவில்லை. நீங்கள் இங்கிருந்து வரவில்லை. நீங்கள் மிசிசிப்பியிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் திரு மற்றும் திருமதி. ஸ்டிரிங்கர் அவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உங்களை குணப்படுத்துவார். உங்களால் அதை விசுவாசிக்க முடியுமானால், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களால் அதைப் பெற்றுக் கொள்ள முடியும். சரி. அது நீங்கள் தான் என்று ஜனங்கள் காணும்படியாக உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அந்த ஜனங்களை எனக்குத் தெரியாது. நான் அவர்களை என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் கண்டதேயில்லை. நண்பனே, நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். அவர் தம்மை அடையாளங்காண்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர். ஆசி.] 48நீங்கள் ஏன் உங்களுடைய தலையை அசைத்து, ஐயா, அந்தவிதமாக என்னை நோக்கிப் பார்த்தீர்கள்? ஆம் ஐயா. நீங்கள் அதைச் செய்திருக்கிறபடியால், நான் உங்களிடத்தில் ஒரு நிமிடம் பேசப் போகிறேன். நீங்கள் ஒருவிதமான முதிர்ந்த வயதுடைய பெருந்தன்மையுள்ளவராய் இங்கே உட்கார்ந்து கொண்டு என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் அப்படிப்பட்ட உத்தமத்தோடு என்னை நோக்கிப் பார்த்தார். அவர் அதை விசுவாசித்தார். நீங்கள் பக்கவாதமுள்ள யாரோ ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆனால் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருப்பதற்கான முக்கியக் காரியம், உங்களுக்குத் தேவை என்னவென்றால், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை . ஊஊ. அது சரியே. நீங்கள் அதை விசுவாசித்தால் நலமாயிருக்குமே! பெண்மணியே, நீங்கள் அதை விசுவாசித்தால் நலமாயிருக்குமே! பெண்மணியே, நீ வேலை தேடிக் கொண்டிருக்கிறாய். அது மட்டுமின்றி, நான் தேவனுடைய தீர்க்கதரிசியா அல்லது ஊழியக்காரனா என்பதை நீ அறிந்து கொள்வாய். உனக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. ஒரு விதமான பெலவீனம் உன்னை விட்டுப் போய்விட்டது. எல்லாவிதமான நிலைமைகளும், ஆவிக்குரிய கோளாறும் போய் விட்டது. அவை யாவும் தீர்த்து வைக்கப்பட்டாயிற்று என்பதை நான் உங்களிடத்தில் கூற விரும்புகிறேன். உங்களுடைய விசுவாசமே உங்களை குணமாக்குகிறது. 49(ஒலி நாடாவில் காலி இடம் —ஆசி... அங்கே உங்களுக்கு அடுத்தபடியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். இங்கே பாருங்கள். அவர் உங்களுடைய ஜெபத்தைக் கேட்டார், நீங்கள் அவரைத் தொட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாதல்லவா? ஆனால் அவர் கேட்கிறார். நீங்கள் எதைக் குறித்து ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்குக் கூறுவேன். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு பித்தப்பைக் கோளாறு உள்ளது, நீங்கள் அதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். தேவன் உங்களை சுகப்படுத்தி, உங்களை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் திருமதி. ஸ்மித் என்பவராயிருக்கிறீர்கள். அது உண்மை . உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள், அவர் தம்மை அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார். அது என்ன? அது ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசத்தையுடைய ஆபிரகாமின் சந்ததியாயுள்ளது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு மத்தியில் அடையாளங்கள் பின் தொடர்வதோடு தம்முடைய வார்த்தையை உறுதிபடுத்துகிறார். யார், எத்தனை பேர் ஜெபிக்கப்பட வேண்டுமென்று ஜெப அட்டைகளை வைத்துள்ளீர்கள்? உங்களுடைய ஜெப அட்டையை வைத்துள்ளவர்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ஓ, நாம் ஜெப் வரிசையைத் துவங்குவது மேலானது. நீங்கள் பாருங்கள், நீங்கள் புரிந்து கொள்ளுகிறதில்லையா? இப்பொழுது அந்த ஆவி மட்டுமல்ல. அது குணப்படுத்துகிறதில்லை. அது அவர் இங்கு இருக்கிறார் என்பதை மாத்திரமே அடையாளங்காட்டுகிறது. உங்களுடைய போதகர்களும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க அதே அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அதைச் செய்கிறதில்லை; இல்லை, நிச்சயமாக இல்லை . ஆனால் அவர்கள் - ஆனால் அவர்கள், “இந்த அடையாளங்கள் விசுவாசிகளைப் பின்தொடரும்.” என்ற அதே அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது எனக்கு இங்கே என்னுடைய போதக நண்பர்கள் தேவைப்படுகிறது. (அது சரியா, கூட்டத்திலிருந்து கூப்பிடுங்கள்...?) 50எத்தனைப் போதகர்கள் இங்கே உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்கள், இங்குள்ள ஊழியக்காரர்களே விசுவாசிக்கிறீர்களா? ஓ, உங்களுக்கு நன்றி, நீங்கள் எழும்பி நிற்பீர்களா என்று நான் வியப்புறுகிறேன். இங்கே வாருங்கள், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க இங்கு இறங்கி வந்து, அப்படியே ஒரு நிமிடம் என்னோடு நில்லுங்கள். இங்கே இறங்கி வாருங்கள். இப்பொழுது சுகமளித்தல் சம்பவிக்கிறதை நீங்கள் கவனித்துப் பாருங்கள், என்ன சம்பவிக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். நீங்கள் வருவதற்கு இங்கே இரட்டை வரிசையை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க இன்னும் ஒரு நிமிடத்தில் அங்கு வரப் போகிறேன். விசுவாசிக்கிற போதகர்கள் விசுவாசிகளாக தங்களை அடையாளங்காட்ட விரும்புகிறவர்கள் எனக்குத் தேவையாயுள்ளது. அதாவது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அதாவது இங்கே உங்களுடைய வருகையானது, நீங்கள் பரிசுத்தமாக, சுத்தமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நினைவிருக்கட்டும், இங்கே என்ன பலன் வரப் போகிறது என்பதையும் பாருங்கள், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சுட்டிக்காட்டுகிறீர்களே! சகோதரன் பிளேயர், அங்குள்ள உங்களை, உங்களை, இல்லை சகோதரன் பேட் அவர்களை நான் அறிவேன். நீங்கள் அதை வழக்கமாகச் செய்கிறவிதமாக அந்த இரட்டை வரிசையை நீங்கள் உருவாக்குவீர்களா? 51விசுவாசிக்கப் போகிற விசுவாசமுள்ள போதகர்களே! இப்பொழுது, பாருங்கள், தேவன் தம்மை அவருடைய வார்த்தையின் மூலம் அவருடைய வார்த்தையோடு அடையாளங்காட்டக் கூடுமானால், வேதத்தில் இயேசு, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று இதைக் கூறினார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? போதகர்களே, நீங்கள் உங்களை இங்கு விசுவாசிகளாக அடையாளங்காட்டவே வந்துள்ளீர்கள். நீங்கள் விசுவாசியாய் இருக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிகளாயிருக்கிறீர்கள், (நீங்கள் அவ்வாறில்லையா?) இல்லையென்றால் நீங்கள் இங்கே நின்று கொண்டிருந்திருக்கமாட்டீர்கள். இப்பொழுது இயேசு என்னக் கூறினார்? “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன.” நான் உங்களோடு ஒரு விசுவாசியாயிருக்கிறேன். நான் வந்து கொண்டிருக்கிறேன். இவர்கள் நம்முடைய ஜனங்களாயிருக்கிறார்கள், நாம் இந்த மந்தையின் மீது மேய்பர்களாயிருக்கிறோம். நான் இப்பொழுது உங்களோடு என்னுடைய வலையை விரிக்க, என்னுடைய கரங்களை உங்களுடைய தோடு இணைக்கவும் வந்து கொண்டிருக்கிறேன். இந்த ஜனங்கள் அருகில் வரும்போது, நீங்கள் உங்களுடய சிந்தையில் ஒரு சிறு சந்தேகத்தைக் கொண்ட எந்தக் காரியத்தையாவது உடையவர்களாயிருந்தால், அதை இப்பொழுதே வெளியேற்றிவிடுங்கள்; எனவே இந்த ஜனங்கள் அருகில் வரும்போது, அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவரும் அருகில் வரும்போது, நாம் அவர்கள் மேல் கரங்களை வைக்க, அவர்கள் குணமடைவார்கள். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? (ஊழியக்காரர்கள், “ஆமென்” என்கின்றனர்.- ஆசி.) எத்தனைபேர் அவர்கள் வரிசையினூடாக கடந்து வரும்போது, மற்றவர்களுக்காக ஜெபிப்பதற்காக இங்கே இருக்கிறீர்கள்? அப்படியானால், “நான் ஜெபித்துக் கொண்டிருப்பேன்” என்று உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். 52நினைவிருக்கட்டும், அது உங்களுடைய தகப்பனாக, உங்களுடைய தாயாக, உங்களுடைய குமாரத்தியாக அல்லது குமாரனாக, சகோதரியாக அல்லது சகோதரனாக இருக்கலாம். அவர்கள் உங்களுடையவர்களாயிருக்கவில்லையென்றால், அது இந்த வரிசையினூடாக வருகிற வேறு யாரோ ஒருவருடையவராயிருக்கப்போகிறார்கள். அது மற்றவர்களாயிருந்தாலும் என்ன? அவர்கள் புற்று நோயினால் அல்லது ஏதோ ஒரு பயங்கரமான நோயினால் மரித்துக்கொண்டிருந்திருந்தால், அப்பொழுது நீங்கள் ஆழ்ந்த உத்தமத்தோடு இருக்க வேண்டிய மனுஷராய் இருக்கமாட்டீர்களா? நிச்சயமாகவே நாம் அவ்வாறு இருப்போம். இப்பொழுது, நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் எப்படி... போகிறீர்கள். இப்பொழுது இங்கே இந்த வரிசையில் உள்ள இவர்கள், இந்த நடைபிரகாரத்தில் உள்ளவர்கள் அந்தப் பக்கத்திற்கு எதிராக ஜெப அட்டையோடு நில்லுங்கள். அந்த பக்கத்திற்கு எதிரே நில்லுங்கள், அந்தப் பிரிவில் உள்ள எல்லோருமே . இப்பொழுது, வழியிலே இடதுபக்கப் பிரிவை நிறுத்துங்கள். ஏனென்றால் நாம் எல்லோரும் நெருக்கமாகி, நீங்கள் பாருங்கள், அப்பொழுது நீங்கள் எப்படி, நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதையே அறியாதிருப்பீர்கள். சரி, இந்தப் பிரிவில் உள்ள யாவரும் இங்கே எழும்பி நில்லுங்கள். இப்பொழுது வலதுபக்கப் பிரிவில் உள்ள யாவரும் அப்படியே இந்த வழியாய் வாருங்கள், ஏனென்றால் நீங்கள் சுற்றிக் கொண்டு வரப் போகின்றீர்கள். நீங்கள் எப்படி போகிறீர்கள், அவர்கள் எப்படி வெளியேப் போகிறார்கள், சகோதரன் பார்டர்ஸ்? வலது பக்க வாசலின் வழியாய் வெளியேப் போய், சுற்றிக் கொண்டு வந்து மீண்டும் கட்டிடத்திற்குள் வருகிறார்கள். 53ஆகையால் இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்தப் பக்கத்தினர் அழைக்கப்படும்போது, அவர்கள் எழும்பி நிற்பார்கள். நாம் இப்பொழுது என்னவென்பதைப் பார்ப்போமாக, சரி, இந்தப் பிரிவில் உள்ள அவர்கள் இங்கே இந்தப் பக்கமாக திரும்புங்கள். உங்களுடைய ஜெப அட்டைகளை வைத்துக் கொள்ளுங்கள், இந்தப் பக்கமாக அங்கு செல்லுங்கள். மாடியின் முகப்பில் உள்ள நீங்கள் அங்கே வரிசையின் கடைசியிலே அவர்களைச் சந்திக்க கீழே நடந்து வாருங்கள். இப்பொழுது இந்த இடதுகைப் பிரிவில் உள்ள இவர்கள் இடதுகைப் பக்கமாக அங்கே செல்லுங்கள். ஆகையால், நீங்கள் பாருங்கள், நீங்கள் உங்களுடைய வரிசையை உண்டாக்கி, அந்த வழியாகத் திரும்பிச் செல்லுங்கள்; திரும்பி வந்து, அந்த வழியாய் திரும்பிச் செல்லுங்கள். புரிகிறதா? நீங்கள் சரியாக வரிசையில் சுற்றிக் கொண்டு வாருங்கள், அப்பொழுது நாம் ஒன்றாய்க் கலந்து விடவேமாட்டோம். அதன்பின்னர் மேலே மாடியின் முகப்பில் உள்ள நீங்கள், உங்களுடைய இடங்களை நடை பிரகாரங்களில் உள்ளவர்கள் வர இடமளித்து, அவர்கள் வரிசையினூடாக வரும்போது உள்ளே வரவிடுங்கள். இப்பொழுது, இப்பொழுது அப்படியே பின்னால் நடந்து செல்லத் துவங்குங்கள், ஒவ்வொருவரும் நீங்கள் இங்கே சுற்றி வந்து இந்த வரிசையில் சந்திக்கும் வரையில் பின்னால் நடந்து செல்லுங்கள். அப்படியே சுற்றி வந்து இங்கே மேலே வாருங்கள், அப்படியே சுற்றி நடந்து வரத் துவங்கி, இங்கே இந்த வரிசையண்டைக்கு சரியாக வாருங்கள். 54ஓ, இப்பொழுது என்ன சம்பவிக்கக் கூடும்! என்ன சம்பவிக்கக் கூடும்! இது எங்கோ ஏதோ ஒரு காரியம் சம்பவிக்க வேண்டிய ஒரு நேரமாய் இருக்கப் போகிறது. சரி. இப்பொழுது அது சரி, அந்த வழியாய் சுற்றி திரும்பிப் போய், சரியாக வரிசையில் அந்த விதமாய் சேர்ந்து கொள்ளுங்கள். இந்த நடை பிரகாரத்தை சுற்றிச் செல்லுங்கள். இப்பொழுது அதுவே வழியாய் உள்ளது. இப்பொழுது நீங்கள் நின்று கொண்டிருக்கும்போது, ஒவ்வொருவரும் அவர்களுடைய காலூன்றி எழும்பி நில்லுங்கள், நாங்கள் ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். இந்த சபையோர் என்னோடு ஜெபிக்கப் போகிறார்கள், அதாவது நீங்கள் குணமடையப் போகிறீர்கள். இப்பொழுது விசுவாசமுடையவர்களாயிருங்கள்... அங்கே மிகவும் பின்னால் உள்ளவர்கள் சுற்றிக் கொண்டு வந்து, சுற்றி வந்து இங்கே பின்னால் உள்ள இந்த வரிசையோடு சேர்ந்து கொள்ளுங்கள். சுற்றி வந்து ஒரு பெரிய வரிசையை உண்டாக்குங்கள். அந்த வழியாய்ச் சுற்றி வந்து, ஒரு வரிசையை உண்டாக்குங்கள். அது தான். ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். இப்பொழுது உண்மையாகவே விசுவாசத்தில் இருங்கள். இப்பொழுது கூட்டத்தை கவனிக்காதீர்கள். நினைவிருக்கட்டும், நாம் - நாம் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தினால் முழுவதும் மறைக்கப்பட்டிருக்கிறோம், அவருடைய வார்த்தையில் விசுவாசமுடையவர்களாயிருப்பதன் மூலம் அவர் நமக்கு மத்தியிலே என்ன செய்துள்ளார் என்பதைக் கனப்படுத்துவது நம்மைப் பொறுத்ததாயுள்ளது. அது அருமையாயுள்ளது. இப்பொழுது அது அப்படியே அருமையாயிருக்கும். வரிசை அப்படியே அற்புதமாக அமைந்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அவர்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கையில், இப்பொழுது கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் உங்களுடைய தலையைத் தாழ்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 55கர்த்தராகிய இயேசுவே, அது சீக்கிரத்தில் சம்பவிக்கவுள்ளது. தீர்மானமோ இப்பொழுது சரியாக செய்யப்பட வேண்டியதாயுள்ளது. நீர் இங்கு இருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோமா? நாங்கள் உம்மை நேசிக்கிறோமா? கர்த்தாவே, நாங்கள் எதைக் கேட்டுக்கொள்ளப் போகிறோமோ அதற்கான போதிய விசுவாசத்தை நாங்கள் உடையவர்களாயிருக்கிறோமா? இந்த ஜனங்கள் வரிசையில் நிற்பதன் மூலம் தங்களை அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, அது வீணாயில்லாமலிருப்பதாக. கர்த்தாவே அவர்கள் இங்கே வரிசையினூடாக கடந்து செல்லும்போது, ஒவ்வொருவரும் இயேசுவண்டை கடந்து சென்று கொண்டிருந்ததைப் போன்றே அப்படியே கடந்து செல்வார்களாக, ஏனென்றால் அவர் இங்கிருக்கிறார் என்று நாங்கள் அறிந்துள்ளோம். அவர்கள் தங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். வருகின்ற வார வாரங்களிலும் கூட இந்த ஜனங்கள் தங்களுடைய போதகர்களண்டை சென்று, ஸ்திரீகளுக்கான கோளாறினை உடைய ஸ்திரீகள், வயிற்றுத் தொல்லை, சுரப்பித் தொல்லையோடு உள்ள புருஷரும், எல்லாவிதமான தொல்லைகளுமே குணமாக்கப்பட்டு, “உங்களுக்குத் தெரியுமா, அந்தக் காரியம் அப்படியே என்னைவிட்டு நீங்கிவிட்டது” என்று கூறுவார்கள் என்ற நிச்சயமுடையவனாய் நான் இருக்கிறேன், ஏனென்றால் அவர்கள் உம்முடைய பிரசன்னத்தில் இருக்கின்றனர். அவர்கள் இப்பொழுது வரிசையினூடாக வந்து, நீர் மரித்துள்ளதற்கான இதை இழுத்துக்கொள்வார்களாக. அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறார்கள், நீர் அவர்களுக்காக ஜெயங்கொண்டிருக்கிறீர். அவர்கள் வந்து, நீர் அவர்களுக்கு அளித்துள்ளதைப் பெற்றுக் கொள்வார்களாக. சாத்தானே, நீ ஒரு தோற்கடிக்கப்பட்ட நபராய் இருக்கிறாய் என்பதை நீ அறிந்துகொள்ளுமளவிற்கு நீ இந்த வாரத்தில் அவ்வளவாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறாய். இயேசு கிறிஸ்து கல்வாரியிலே உன்னைத் தோற்கடித்துவிட்டார். நாங்கள் நீதிமான்களாக்கப்படுவதற்காக அவர் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். அவர் இப்பொழுது எங்களுக்கு மத்தியிலே நிற்கிறார். எங்களுடைய விசுவாசம் அவரை நோக்கிப் பார்க்கிறது, உன்னிடத்திலிருந்தும் மற்றும் நீ செய்துள்ள எந்தக் காரியமானாலும், அதை எடுத்துப் போட்டுவிட்டார். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனங்களை விட்டுப் போ. [சகோதரன் பிரான்ஹாமும், மற்ற ஊழியக்காரர்களும் வியாதியஸ்தர்மேல் கரங்களை வைத்து, ஜெப வரிசையில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறார்கள். ஒலி நாடாவில் காலி இடம்- ஆசி....?... 56எஜமான் எங்களைச் செய்யும்படி கட்டளையிட்டபடியே நாங்கள் செய்திருக்கிறோம். அந்த வரிசையினூடாக உங்களில் எத்தனைபேர் சென்று, நீங்கள் குணமடைய போகிறீர்கள் என்று விசுவாசித்தீர்கள், அப்படியானால் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நானும் என்னுடைய கரத்தை உங்களோடு சேர்த்து உயர்த்துகிறேன். நாங்கள் அங்கே ஒரு கூட்ட ஊழியர்களாக கடைசியிலே என்ன செய்துகொண்டிருந்தோமென்றால், அவர்களில் அநேகர் சுகவீனமாயிருந்தனர், நான் அதை அறிந்திருந்தேன், ஆனால் அவர்கள் உள்ளே இருந்தாலும் அல்லது இல்லையென்றாலும், தங்களுடைய சபையோர் உள்ளே வர முயற்சித்துக்கொண்டிருந்தனர். அதுவே அசலான மேய்ப்பர்களாகும். பரிசுத்த ஆவியானவர் என்னிடத்தில், “அவர்கள் ஒருவரோடு ஒருவர் கரங்களை சேர்த்துக் கொள்ளும்படிச் செய்” என்றார். நாங்கள் எங்களுடைய இருதயங்களை ஒன்றாகக் கட்டி பிணைத்து, ஒன்று சேர்ந்து எங்களுடைய ஜெபங்களை ஏறெடுத்தோம். இயேசு அவர்களையும் கூட குணப்படுத்துகிறார். அவர்களை பலமான மேய்ப்பர்களாகவும், கர்த்தருடைய வார்த்தையில் பலமுள்ளவர்களாக்குவாராக. என் சகோதரர்களே, தேவன், அவர் உங்களுக்கு உங்களுடைய எல்லா இருதயத்தின் வாஞ்சைகளையும் அளிப்பாராக. நீங்கள் அவருக்கு எல்லா நாட்களிலும் சேவை செய்வீர்களாக, இந்த அருமையான ஜனக் கூட்டத்திற்கு ஊழியம் செய்ய உங்களுடைய ஜீவியங்களில் தேவனுடைய வல்லமையைப் பெற்றுக் கொள்வீர்களாக. நம்மோடு இருந்து வருகிற, எல்லா நேரத்திலும் நம்மோடு இருக்கிற இயேசு கிறிஸ்துவானவர், அவர் இதற்கு முன்பு எப்போதும் இருந்து வந்துள்ளதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவாராக. 57ஜனங்களே நீங்கள், முடமாயிருந்த உங்களில் சிலர், நீங்கள் கொஞ்ச நேரம் எந்த வித்தியாசத்தையுமே காணாமலிருக்கலாம், நீங்கள் எந்த வித்தியாசத்தையுமே காணாமலிருக்கலாம். ஆபிரகாம் என்ன செய்தான் என்பதை நோக்கிப் பாருங்கள். அது எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணுகிறதில்லையே! நீங்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது அதுவல்ல. நீங்கள் உங்களுடைய நோய் அறிகுறிகளை நோக்கிப் பார்க்காதீர்கள். அவர் என்னக் கூறினார் என்பதையே நோக்கிப் பாருங்கள். நீங்களோ, “நான் இன்னமும் வலியை உணருகிறேன்” என்று கூறினால், அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. தேவன் என்ன செய்யும்படி கூறினாரோ அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள். பாருங்கள், அதை நோக்கிப் பார்க்காதீர்கள். அவர் என்னக் கூறினார் என்பதையே நோக்கிப் பாருங்கள். அது அவ்வண்ணமாயிருந்தது என்று தேவன் கூறினாரே! நான் அதை விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர். ஆசி.] நான் என்னுடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்கிறேன். நான் உங்களை மீண்டும் காணும் வரை தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய ஜெபங்கள் உங்களுக்காகவே உள்ளன; இரவு எவ்வளவு அந்தகாரமானாலும், மழை எவ்வளவு அதிகமாகப் பொழிந்தாலும், நான் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பேன். நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். நாம் மீண்டும் சந்திக்கும் வரையில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது போதகராயிருந்து கொண்டிருக்கிற சகோதரனே, பாருங்கள்.